தமிழ்நாடு

சாலையை கடக்கும்போது நேர்ந்த சோகம்.. கணவன், மனைவி பரிதாப பலி : நடந்தது என்ன?

வாகன விபத்தில் தம்பதி உயிரிழந்த சம்பவம் வத்தலகுண்டு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சாலையை கடக்கும்போது நேர்ந்த சோகம்.. கணவன், மனைவி பரிதாப பலி : நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்தவர் மீனாச்சாமி. இவரது மனைவி ஜெயக்கொடி. இந்த தம்பதியினர் உறவினர் ஒருவரின் இறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தங்களின் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர்.

இவர்கள் வத்தலகுண்டு சாலையைக் கடந்து புறவழிச்சாலைக்கு வந்தனர். பின்னர் சாலையின் எதிர்ப்புறம் செல்லவேண்டும் என்பதால் சாலையை கடக்க முயன்றனர். அப்போது, பெரியகுளத்தில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்த லாரி ஒன்று இருசக்கர வாகனத்தில் மோதியது. இதில் அவர்கள் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் இருவரது சடலத்தையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகன விபத்தில் தம்பதி உயிரிழந்த சம்பவம் வத்தலகுண்டு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories