தமிழ்நாடு

தஞ்சை மாணவி தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்... வெளியானது இன்னொரு வீடியோ - உண்மையான காரணம் என்ன?

தற்கொலை செய்துகொண்ட தஞ்சாவூர் மாணவியின் புதிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

தஞ்சை மாணவி தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்... வெளியானது இன்னொரு வீடியோ - உண்மையான காரணம் என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தஞ்சாவூர் பள்ளி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் பள்ளியில் மதமாற்றத்திற்கு வற்புறுத்தியதால் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக பா.ஜ.கவினர் குற்றம்சாட்டிவந்த நிலையில் அந்த மாணவி பேசிய இரண்டாவது வீடியோ வெளியாகியுள்ளது.

தஞ்சாவூர் மைக்கேல்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவர் கடந்த 19ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார். மருத்துவமனையில் தன்னை பரிசோதித்த மருத்துவர்களிடம் மாணவி, தான் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்ததாகவும், விடுதியில் தன்னை அனைத்து அறைகளையும் தூய்மை செய்ய வேண்டும் என்று வார்டன் கூறியதன் பேரில் ஏற்பட்ட மன உளைச்சலால் பூச்சி மருந்தை குடித்ததாகவும் தெரிவித்ததாக தகவல் வெளியானது.

இதற்கிடையே, மாணவி மரணத்துக்கு தனியார் பள்ளியின் மதமாற்ற முயற்சியே காரணம் என்று பா.ஜ.க மற்றும் இந்து அமைப்புகள் குற்றம்சாட்டின. மதமாற்றம் நடந்ததாக மாணவி சொல்வதுபோல வீடியோ ஒன்றும் வெளியாகி பரவியது.

மாணவியிடம் கேள்வி கேட்டு வீடியோ எடுத்தவர், விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த முத்துவேல் என்பது விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில், மாணவியின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது.

அந்த வீடியோவில், “எப்போதும் நான்தான் முதல் மதிப்பெண் பெறுவேன். ஆனால் இந்த ஆண்டு குடும்பச்சூழல் காரணமாக பள்ளிக்கு சரியாக செல்ல முடியவில்லை, லேட்டாகத்தான் சென்றேன். அதனால் அங்குள்ள சிஸ்டர் என்னை கணக்கு பார்க்க சொல்வார்கள், இல்லை நான் படிக்க வேண்டும் என்று கூறினாலும் என்னை விட மாட்டார்கள்.

நீ எழுதிக் கொடுத்துவிட்டு உன் வேலையைப் பார் என்று வற்புறுத்துவார்கள். நான் சரியாக எழுதினாலும் தப்பு தப்பு என்று கூறுவார்கள். ஒரு மணி நேரம் என்னை உட்கார வைத்து விடுவார்கள். அதனால் மதிப்பெண் குறைவாக எடுத்தேன்.

என்னால் இந்தச் சூழலில் படிக்க முடியாது என்பதால் விஷம் குடித்தேன். அனைத்து வேலைகளையும் என்னை செய்ய சொல்வார்கள். வீட்டுக்கு போக வேண்டும் என்று கேட்கும்போது, விடமாட்டார்கள். இங்கேயே இருந்து படி என்பார்கள். பொட்டு வைக்கக்கூடாது என்று என்னை வற்புறுத்தவில்லை” என அந்த மாணவி கூறியுள்ளார்.

இந்த வீடியோ தற்போது பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம் இந்த விவகாரத்தை பா.ஜ.கவினர் மற்றும் இந்துத்வா கும்பலைச் சேர்ந்தவர்கள் தங்கள் மதவெறி அரசியலுக்காக கையில் எடுத்து, அவதூறுகளைப் பரப்பி வந்தது அம்பலமாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories