தமிழ்நாடு

“8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தலைமறைவான தந்தை” : போலிஸார் வலை வீச்சு - நடந்தது என்ன ?

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து தலைமறைவான தந்தைக்கு போலிஸார் வலை வீசி தேடி வருகின்றனர்.

“8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தலைமறைவான தந்தை” : போலிஸார் வலை வீச்சு - நடந்தது என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகேயுள்ள அத்திகுண்டா கிராமத்தை சேர்ந்தவர் நேரு (45) கூலி தொழிலாளி. இருவருக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தையும் 8 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.

இந்நிலையில், வீட்டில் தனியாக இருந்த அவரது 8 வயது மகளிடம் தந்தை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதையடுத்து குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்ப்பக்கத்தினர் வருவதற்க்குள் நேரு அங்கிருந்து இருந்து தப்பி சென்றுள்ளார்.

தகவலறிந்த அவரது தாய் சிறுமியை கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். இது குறித்து குழந்தையின் தாய் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து புகாரின் அடிப்படையில் தலைவமறைவாக உள்ள நேருவை போலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

வேப்பனபள்ளி அருகே 8 வயது சிறுமியை தந்தையே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories