தமிழ்நாடு

“இந்துத் துறையை மிகுந்த அக்கறையோடு கவனிக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்” : பொன்னம்பல அடிகளார், சுகி சிவம்!

“இந்து சமய அறநிலையத் துறையை முதல்வர் மு.க.ஸ்டாலின் மிகுந்த அக்கறையோடு கவனிக்கிறார்” என்று தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் - சுகி சிவம் ஆகியோர் பேசும்போது புகழாரம் சூட்டினர்.

“இந்துத் துறையை மிகுந்த அக்கறையோடு கவனிக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்” : பொன்னம்பல அடிகளார், சுகி சிவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

“இந்து சமய அறநிலையத் துறையை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மிகுந்த அக்கறையோடு கவனிக்கிறார்” என்று இதற்கான ஆலோசனைக் கூட்டத்தில் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் - சுகி சிவம் ஆகியோர் பேசும்போது புகழாரம் சூட்டினர்.

தவத்திரு குன்றக்குடி அடிகளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்து சமய அறநிலையத்துறை ஆலோசனைக் குழுக் கூட்டத்தில், ஆலோசனைக் குழு உறுப்பினர் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பேசியதாவது :-

நம்முடைய அறநிலையத் துறை எப்போதுமே நம்முடைய பாராட்டுதலுக்குரிய முதல்வர் அவர்களின் ஆட்சியின் கீழ், செவ்வனே செயல்பட்டு வருகிறது. அதற்கு ஆன்மீக உள்ளங்களின் சார்பாக நாங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். துறையின் வெளிப்படைத் தன்மை, திருக்கோயில்களின் நிருவாகத்தை வெளிப்படைத் தன்மைக்கு உட்படுத்தியிருப்பது, பல நல்ல திட்டங்களை, பக்தர்களுக்கு மேம்படுத்தக்கூடிய வசதிகளை உருவாக்கியிருப்பது இவை யெல்லாம் வரவேற்பிற்குரியது. இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் சுகி சிவம் பேசுகையில், “நீண்ட காலத்திற்குப் பிறகு முதல்வருடைய நேர்பார்வையில் அறநிலையத் துறை சீரமைக்கப்படுவது ஒரு பெரிய வெற்றி என்று சொல்ல வேண்டும். காரணம், அந்தந்த அமைச்சரிடத்தில் விட்டுவிட்டு, முதலமைச்சர்கள் இதை முழுமையாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.

ஆனால் இந்தத் துறையினால், எந்தக் கெட்ட பெயரும் வந்து விடக் கூடாது என்பதில் முதலமைச்சர் அவர்கள் மிகுந்த அக்கறையோடு இதை நேரடியாக பார்ப்பதற்கு இந்தக் குழுவின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories