தமிழ்நாடு

“ஐரோப்பியாவின் ‘ரவுல் வாலன்பெர்க்’ விருது.. தமிழ் மக்களுக்கு கிடைத்த அங்கீகாரம்” : எவிடன்ஸ் கதிர் பேட்டி!

ஐரோப்பியக் கவுன்சில் சார்பாக மனிதாபிமானம் மற்றும் தலித் மக்களுக்கான பாதுகாவலராக திகழ்ந்ததற்காகவும் மதுரை எவிடன்ஸ் கதிருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

“ஐரோப்பியாவின் ‘ரவுல் வாலன்பெர்க்’ விருது.. தமிழ் மக்களுக்கு கிடைத்த அங்கீகாரம்” : எவிடன்ஸ் கதிர் பேட்டி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஐரோப்பியக் கவுன்சில் சார்பாக மனிதாபிமானம் மற்றும் மனித உரிமைகளுக்காக , சிறந்த பணிக்காகவும் தாழ்த்தப்பட்ட தலித் மக்களுக்கான பாதுகாவலராக திகழ்ந்ததற்காகவும் மதுரை எவிடன்ஸ் கதிருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதை ஒட்டுமொத்த இந்திய மற்றும் தமிழ் மக்களுக்கு கிடைத்த அங்கீகாரமாகக் கருதுவதாக எவிடன்ஸ் கதிர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் "எவிடன்ஸ்" அமைப்பின் நிறுவனர் வின்சென்ட் ராஜ் ஆரோக்கியசாமி, வரலாற்று ரீதியாக "தீண்டத்தகாதவர்கள்" என்று அழைக்கப்படும் தலித்துகளின் வாழ்க்கையில் அர்த்தமுள்ள மாற்றத்தை கொண்டு வருவதில் சிறந்த உறுதி மற்றும் விடாமுயற்சிக்காக ஐரோப்பா கவுன்சிலின் ரவுல் வாலன்பெர்க் பரிசு பெற்றுள்ளார்.

கதிர் என்ற வின்சென்ட் ராஜ் ஆரோக்கியசாமி தனது உயிரைப் பணயம் வைத்து இந்திய மக்கள்தொகையில் மிகவும் பின்தங்கிய பகுதியினருக்கு உதவி, அவர்கள் பெரும்பாலும் தேசிய மற்றும் சர்வதேச சமூகங்களால் புறக்கணிக்கப்படும் அவலநிலைதொடர்கிறது. நம்பமுடியாத அர்ப்பணிப்பு, உறுதியுடன் மனித உரிமைகளைப் பாதுகாப்பதில், "தீண்டத்தகாதவர்கள்" என்று அழைக்கப்படுபவர்களுக்கான அவரது துணிச்சலான நடவடிக்கைகள் ரவுல் வாலன்பெர்க் விருதின்மூலம் கெளரவம் அளிக்கிறது" என்று ஐரோப்பிய கவுன்சிலின் பொதுச் செயலாளர் மரிஜா பெஜினோவிக் புரிக் கூறியுள்ளார்.

“ஐரோப்பியாவின் ‘ரவுல் வாலன்பெர்க்’ விருது.. தமிழ் மக்களுக்கு கிடைத்த அங்கீகாரம்” : எவிடன்ஸ் கதிர் பேட்டி!

1945 இல் புடாபெஸ்டில் ரவுல் வாலன்பெர்க் கைது செய்யப்பட்டதன் ஆண்டு நிறைவை ஜனவரி 17 குறிக்கிறது. ஸ்வீடிஷ் இராஜதந்திரி தனது அந்தஸ்தைப் பயன்படுத்தி பல்லாயிரக்கணக்கான யூதர்களை ஹோலோகாஸ்ட் இனப்படுகொலையிலிருந்து காப்பாற்றினார். ஒரு நபரின் தைரியமும் திறமையும் உண்மையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை அவரது செயல்கள் காட்டுகின்றன.

2012 இல் நிறுவப்பட்ட, ஸ்வீடன் அரசாங்கம் மற்றும் ஹங்கேரிய பாராளுமன்றத்தின் முன்முயற்சியில், ஐரோப்பா கவுன்சில் அவரது சாதனைகளின் நினைவாக ரவுல் வாலன்பெர்க் விருது மற்றும் பரிசினை உருவாக்கியுள்ளது. €10,000 மதிப்புள்ள இந்த பரிசு, ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் ஒரு தனி நபர், தனிநபர்கள் குழு அல்லது ஒரு அமைப்பு மூலம் அசாதாரண மனிதாபிமான சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு கதிர் என்னும் வின்சென்ட் ராஜ் ஆரோக்கியசாமி மகத்தான துணிச்சலை வெளிப்படுத்தி, தனது சொந்த மற்றும் தனது குடும்பத்தின் உயிருக்கு பெரும் ஆபத்துக்களை எதிர்கொண்டுள்ளார். 3,000 மனித உரிமை மீறல் சம்பவங்களில் பாதிக்கப்பட்ட 25,000 பேரை அவர் காப்பாற்றியுள்ளார். இதனால், அவர் குடும்பத்தைப் பாதுகாப்பதற்காக அவர்களைப் பிரிந்து வாழ வேண்டியுள்ளது. தலித்துகள் மற்றும் பிறரின் குரல்கள் அரிதாகவே கேட்கப்படும் நீதியை மேம்படுத்தும் நோக்கத்திற்காக அவர் தனது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளார் என்பதற்காக இந்த விருது வழங்கப்படுகிறது.

விருது வழங்கும் விழா ஜனவரி 19 புதன்கிழமை அன்று 12.30 CETல் காணொளி நிகழ்வானது நேரடியாக ஒளிபரப்பப்படும், மேலும் விருது நிகழ்ச்சியில் பொதுச் செயலாளர், நடுவர் மன்றத்தின் தலைவர் மற்றும் பரிசு பெற்ற கதிர் ஆகியோர் பங்குகொள்வர். விழாவைத் தொடர்ந்து ரவுல் வாலன்பெர்க்கின் வாழ்க்கை குறித்த ஜோசெப் சிபோஸின் ஆவணப்படம் “தி லாஸ்ட் ஐரோப்பியன்” திரையிடப்படும். ஆவணப்படத்தை ஜனவரி 23 வரை ஆன்லைனில் இலவசமாக பார்க்கலாம்.

விருது குறித்து நம்மிடம் பேசிய கதிர், “பிரான்ஸ் நாட்டில் உள்ள ஐரோப்பியக் கவுன்சில் ( 47 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்டது) சார்பாக இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக அளவில் மனிதாபிமானம் மற்றும் மனித உரிமைகளுக்காக சிறந்த பணி செய்யக்கூடிய ஒரு நபரைத் தேர்ந்தெடுத்து விருதுகள் வழங்கி கவுரவிக்கிறது.

அந்த கவுன்சில் 2022ம் ஆண்டுக்கான, தாழ்த்தப்பட்ட, தலித் மக்களுக்கான பாதுகாவலராக திகழ்வதாக இந்த விருது தமக்கு வழங்கப்படுவதாகவும், மேலும் ஒட்டுமொத்த இந்திய மற்றும் தமிழ் மக்களுக்கு கிடைத்த அங்கீகாரமாக தாம் கருதுவதாகவும், தெற்கு ஆசியாவிலேயே முதல் முதலாக இந்தியாவில், தமிழகத்தில் உள்ள ஒரு நபருக்கு கொடுக்கப்படுவது இதுவே முதன்முறை இதை நான் பெருமையாகக் கருதுவதாகவும், மேலும் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்வது என்பது ஒரு வரம் , கடந்த 25 ஆண்டு கால தனது மனித உரிமைகள் பணிகளுக்கு கிடைத்த அங்கீகாரம் எனவும், இந்த பட்டத்தை ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் சமர்ப்பிப்பதாகவும், மேலும் இந்த விருது பெறுவதன் மூலம் சர்வதேச அளவில் தனது பரப்புரையை கொண்டு செல்வதற்கு ஒரு நல்வாய்ப்பாகக் கருதுவதாகவும் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories