தமிழ்நாடு

சாலையில் கிடந்த தங்க நகை.. காவல்நிலையத்தில் ஒப்படைத்த நபருக்குக் குவியும் பாராட்டு: நடந்தது என்ன?

சாலையில் கிடந்த தங்க நகையை உரிமையாளரிடம் ஒப்படைத்த நபருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

சாலையில் கிடந்த தங்க நகை.. காவல்நிலையத்தில் ஒப்படைத்த நபருக்குக் குவியும் பாராட்டு: நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கோவையைச் சேர்ந்தவர் கவிதா தேவி. இவர் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 14ம் தேதி பொங்கல் பண்டிகைக்காக காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் பொருட்களை வாங்கியுள்ளார்.

பின்னர் வீட்டிற்கு வந்தபோது, அவரது கழுத்தில் அணிந்திருந்த இரண்டு பவுன் தங்க நகை காணாமல் போயிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்நிலையில் பீளமேடு பகுதியைச் சேர்ந்த சுரேஷ் ஷாம் எட்வர்ட் என்பவர் சாலையில் 2 பவுன் தங்க நகை கிடந்ததாகக் கூறி காட்டூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். இது குறித்து காவலர் தேவிக்கு தெரிவிக்கப்பட்டது.

பின்னவர் அங்கு வந்த அவர் இது தனது நகைதான் என கூறியதை அடுத்து அவரிடம் 2 பவுன் தங்க நகை ஒப்படைக்கப்பட்டது. மேலும் தொலைத்த நகையைப் பத்திரமா மீட்டுக் கொடுத்த சுரேஷ் ஷாமுக்கு நன்றி தெரிவித்து பாராட்டினார்.

இது குறித்து அறிந்த உதவி ஆணையர் வின்சன்ட், நகையை மீட்டுக் கொடுத்த சுரேஷ் சாம் எட்வர்டை காவல்நிலையம் அழைத்துப் பாராட்டு தெரிவித்தார். மேலும் பலரும் அவருக்குப் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories