தமிழ்நாடு

மனைவியை வெட்டி கூறுபோட்ட கணவன்; பயத்தில் தற்கொலைக்கு முயற்சித்தவர் சிக்கியது எப்படி?

17 ஆண்டுகளாக உடன் வாழ்ந்த மனைவியை துடிக்க துடிக்க கொன்ற கணவனின் வெறிச்செயல் திருக்கோவிலூரில் நடந்துள்ளது.

மனைவியை வெட்டி கூறுபோட்ட கணவன்; பயத்தில் தற்கொலைக்கு முயற்சித்தவர் சிக்கியது எப்படி?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கள்ளுக்குறிச்சி திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்த தம்பதி லோகநாதன் - பேபி. திருமணமாகி 17 ஆண்டுகள் ஆன நிலையில் இந்த தம்பதிக்கு 2 மகன்களும், 1 மகளும் உள்ளனர்.

சென்னைக்கு அடுத்து உள்ள செங்கல் சேம்பரில் பணியாற்றி வரும் லோகநாதன் குடும்பத்துடன் பொங்கல் பண்டிகைக்காக ஊருக்குச் சென்றிருக்கிறார்கள். அங்கு புது துணிமணிகள் பொங்கலுக்கு தேவையான பொருட்களை வாங்கியிருக்கிறார்கள்.

இந்நிலையில், அன்று இரவு வீட்டில் உள்ள கொட்டகையில் லோகநாதன் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயற்சித்ததை அவரது தாயார் கவனித்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு காப்பாற்றி இருக்கிறார்கள்.

எதற்காக தற்கொலைக்கு முயன்றார் என விசாரிக்கையில் அவரது மனைவி பேபி மீதான நடத்தையின் சந்தேகத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது ஆத்திரத்தில் பேபியை சரமாரியாக வெட்டி சாய்த்திருக்கிறார்.

இதனால் அவர் உயிரிழந்ததால் மாட்டிக்கொள்வோமோ என்ற பயத்தில் லோகநாதன் தற்கொலைக்கு முயற்சித்திருக்கிறார். இந்த விவகாரம் குறித்து அறிந்த திருக்கோவிலூர் போலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால் லோகநாதனின் குடும்பத்தினர் பெருமளவில் அதிர்ச்சிக்கு ஆளாகியதோடு அப்பக்குதி வாசிகளிடையே பேபியின் மரணம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

banner

Related Stories

Related Stories