தமிழ்நாடு

குடும்பச் சண்டையில் ஒருவர் உயிரிழப்பு.. சகோதரி கணவருக்கு நேர்ந்த சோகம் - நடந்தது என்ன?

சென்னை அசோக்நகர் பகுதியில் குடும்பச் சண்டையில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குடும்பச் சண்டையில் ஒருவர் உயிரிழப்பு.. சகோதரி கணவருக்கு நேர்ந்த சோகம் - நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னை அசோக்நகர் பகுதியைச் சேர்ந்தவர் குமார்(50). இவரின் அம்மா கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் இறந்துள்ளார். அதனால் கடந்த 11ம் தேதி தனது அம்மா புகைப்படத்திற்கு மாலை அணிவித்து வீட்டில் வைத்து சாமி கும்பிட்டுள்ளார்.

உறவினர்கள் பலரும் கலந்துக்கொண்ட நிலையில், குமாரின் மனைவி அன்னலட்சுமி மட்டும் கலந்துக்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், அன்றைய தினம் அன்னலட்சுமி அவரது அம்மா வீட்டிற்குச் சென்றதால் குமார் கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.

அதுமட்டுமல்லாது, வீடு திரும்பாத தனது மனைவியை கண்டிப்பதற்காக குமார் அவரது மாமியார் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு நடந்த வாக்குவாதத்தின் போது, அன்னலட்சுமியின் சகோதரர் முனுசாமி மற்றும் குமார் இருவரும் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது வாக்குவாதம் முற்றிய நிலையில், முனுசாமி தள்ளிவிட்டதில் கீழே விழுந்த குமாருக்கு தலையில் பலத்துக் காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து குமாரை மீட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அக்கம் பக்கத்தினர் சேர்த்துள்ளனர்.

இதனிடையே குமாரின் சகோதரி விலாசவதி கொடுத்தப் புகாரின் பேரில் அசோக் நகர் போலிஸார் வழக்குத் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தநிலையில், காயமடைந்த குமார் நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து போலிஸார் கொலைவழக்காக மாற்றி விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories