தமிழ்நாடு

காதலுக்கு எதிர்ப்பு.. காதலனை இரவு முழுவதும் கட்டி வைத்து கொடூரமாக தாக்கிய முதலாளி - நடந்தது என்ன?

பொள்ளாச்சியில் காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இளைஞரை தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதலுக்கு எதிர்ப்பு.. காதலனை இரவு முழுவதும் கட்டி வைத்து கொடூரமாக தாக்கிய முதலாளி - நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பொள்ளாட்சியை அடுத்த வேட்டைக்காரன் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிஹரசுதாகர். இவர் அதேபகுதியில் உள்ள தோட்டத்தில் 10 ஆண்டுகளாக வேலைப் பார்த்து வந்துள்ளார். அப்போது அதேதோட்டத்தில் பணியாற்றிய பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு அவரைக் காதலித்து வந்துள்ளார்.

இருவரும் ஒரே இடத்தில் வேலைப் பார்த்தால் சரியாக இருக்காது என நினைத்து, ஹரி மட்டும் அங்கிருந்து விலகி வேறு தொழிக்குச் சென்றுள்ளார். இதனால் தோட்டத்து உரிமையாளரான ராமசாமி கடும் கோபத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இருவரின் காதல் விவகாரம் ராமசாமிக்கு தெரியவரவே இனி ஃபோனில் பேசக் கூடாது என அந்த பெண்ணை கண்டித்துள்ளார். மேலும் ஹரி உறவினர்களிடம் இதுதொடர்பாக மிரட்டியுள்ளார். ஆனால் அவரின் பேச்சைக் கேட்காமல் இருவரும் மீண்டும் பேசிவந்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த ராமசாமி, ஹரியை தோட்டத்திற்கு அழைத்து கடுமையாக தாக்கியுள்ளார். அதுமட்டுமல்லாது தோட்டத்தில் பணியாற்றிய கேசவன், கூலித் தொழிலாளி காளிமுத்து மற்றும் வட மாநில இளைஞர்கள் என மூன்று பேரும் சேர்ந்து தாக்கியுள்ளனர்.

இரவு முழுவதும் கட்டி வைத்து தாக்கியதில் ஹரி மயக்கமடைந்துள்ளார். பின்னர் அவரை அங்கிருந்து வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். மகன் ரத்துக் காயத்துடன் வந்ததைக் கண்டு, அதிர்ச்சி அடைந்து தந்தை அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிள்ளார். மேலும் இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆனைமலை காவல் நிலையத்தில் இதுதொடர்பாக புகார் ஒன்றையும் அளித்தார்.

புகாரைப் பெற்றுக்கொண்ட போலிஸார் இதுதொடர்பாக விசாரணை நடத்தி, ராமசாமி மாற்றம் கணக்குப்பிள்ளை கேசவன் உள்ளிட்ட 6 பேர் மீது பொள்ளாச்சி அனமலை காவல் நிலைய போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories