தமிழ்நாடு

“பேருந்தில் 75% இருக்கைகளுடன் மட்டுமே பயணிக்க அனுமதி” : ஊரடங்கு கட்டுப்பாடுகள் முழு விவரம் இங்கே..!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறப்பித்த உத்தரவின் முக்கிய அம்சங்கள் இங்கே..!

“பேருந்தில் 75% இருக்கைகளுடன் மட்டுமே பயணிக்க அனுமதி” : ஊரடங்கு கட்டுப்பாடுகள் முழு விவரம் இங்கே..!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாட்டு நெறிமுறைகளை ஜனவரி 31 வரை நீட்டித்து தமிழ்நாடு அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில், கடந்த ஜன., 6ஆம் தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை, இரவு நேர ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. மேலும், 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு குறித்து மருத்துவ நிபுணர்கள் குழுவினர் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறப்பித்த உத்தரவின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

* தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடு ஜனவரி 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

* ஜன.,14 முதல் 18 வரை அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதியில்லை.

* வரும் 16-ம் தேதி ஞாயிறன்று பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

* பொங்கல் பண்டிகையொட்டி வெளியூர்களுக்குச் செல்லும் பேருந்தில் 75 சதவீத இருக்கைகளுடன் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

* ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை தொடரும். அனுமதிக்கப்பட்ட இதர செயல்பாடுகளும் தொடரும்.

* கொரோனா வழிபாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல், விதி மீறும் வணிக நிறுவனங்களை மூட மாவட்ட நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

* பொதுமக்கள் அனைவரும் தவறால் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

* பொதுமக்கள் அத்தியாவசிய காரணங்களுக்காக மட்டும் வெளியே செல்ல வேண்டும்.

* பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். தனி மனித இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்.

banner

Related Stories

Related Stories