தமிழ்நாடு

பெற்றோர்களே எச்சரிக்கை.. விளக்கெண்ணெய் வைத்தியத்தால் பிஞ்சு குழந்தை பரிதாப பலி - நடந்தது என்ன?

விளக்கெண்ணைய் கொடுத்தால் பிறந்த குழந்தை உயிரிழந்த சம்பவம் திருச்சியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெற்றோர்களே எச்சரிக்கை.. விளக்கெண்ணெய் வைத்தியத்தால் பிஞ்சு குழந்தை பரிதாப பலி - நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திருச்சி மாவட்டம், அய்யம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி சாந்தி. இந்த தம்பத்திக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், இரண்டாவது குழந்தையின் பிரசவத்திற்காகச் சாந்தி அவரது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு சாந்திக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

இதையடுத்து கடந்த 16ம் தேதி குழந்தையின் வயிற்றைச் சுத்தம் செய்வதற்காக சாந்தி இரண்டு சொட்டு விளக்கெண்ணைய் வாயில் தடவியுள்ளார். பின்னர் அன்று இரவு குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.

உடனே குழந்தையை அருகே இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றனர். அங்கு குழந்தை சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 'மருத்துவம் படிக்காமல் மருத்துவம் பார்ப்பது சட்டப்படி குற்றமாகும். இப்படி செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என ஐஜி பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

banner

Related Stories

Related Stories