தமிழ்நாடு

Google Pay மூலம் தனியார் மருத்துவமனை பணத்தை திருடிய கும்பல்.. வட மாநில கொள்ளையர்கள் சிக்கியது எப்படி?

கூகுள் பே மூலம் தனியார் மருத்துவமனையின் பணத்தை நூதனமாகக் கொள்ளையடித்த கும்பலை போலிஸார் கைது செய்தனர்.

Google Pay மூலம் தனியார் மருத்துவமனை பணத்தை  திருடிய கும்பல்.. வட மாநில கொள்ளையர்கள் சிக்கியது எப்படி?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனை அண்மையில் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவில் புகார் ஒன்று கொடுத்தது. அதில், மர்ம நபர்கள் கூகுள் பே மூலம் ரூ. 25 லட்சம் வரை நூதனமாக மோசடி செய்துள்ளதாகத் தெரிவித்திருந்தது.

இதையடுத்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து இந்த மோசடி குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ரோகன், ராகேஷ்குமார் சிங், சயந்தன் முகர்ஜி, ராகுல் ராய் ஆகியே நான்கு பேர் கொண்ட கும்பல்தான் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

உடனே சென்னை மத்திய குற்றப்பிரிவு போலிஸார் மேற்கு வங்கத்திற்குச் சென்று நான்கு பேரையும் கைது செய்து சென்னை அழைத்து வந்தனர் பின்னர் இந்த கொள்ளை சம்பவம் குறித்து சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் பேசும் போது, "இந்த கும்பல் செல்போன் எண்களை மட்டுமே வைத்துக்கொண்டு மற்றொரு சிம்கார்டை ஆக்டிவேட் செய்து அந்த எண்ணிண் தொடர்பில் இருக்கும் வங்கிக் கணக்கு மற்றும் கூகுள் பே மூலம் பணத்தைக் கொள்ளையடித்துள்ளனர்.

இப்படிதான் தனியார் மருத்துவமனையின் பணத்தையும் இந்த கும்பல் கொள்ளையடித்துள்ளது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த கும்பலிடம் விசாரணை நடைபெற்று வருகிறது" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories