தமிழ்நாடு

“திமிர் பிடித்தவர்; விவசாயிகள் எனக்காகவா இறந்தார்கள்? என்கிறார்”: மோடி மீது மேகாலயா ஆளுநர் குற்றச்சாட்டு!

“பிரதமர் மோடியிடம் விவசாயிகள் உயிரிழப்பு தொடர்பாக கேட்டபோது, அதற்கு பதிலளித்த பிரதமர் மோடி அவர்கள் அனைவரும் எனக்காகவா இறந்தார்கள்?” என கேள்வி எழுப்பியதாக ஆளுநர் சத்ய பால் மாலிக் குற்றம்சாட்டியுள்ளார்!

“திமிர் பிடித்தவர்; விவசாயிகள் எனக்காகவா இறந்தார்கள்? என்கிறார்”: மோடி மீது மேகாலயா ஆளுநர் குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மேகலாய ஆளுநர் ஆளுநர் சத்ய பால் மாலிக் சமீபகாலங்களில் மோடி அரசு செய்யும் குற்றங்களை அடையாளப்படுத்தி தொடர்ச்சியாக கண்டித்து வருகிறார். மேலும் ஆளுநரின் அதிகாரங்களில் ஒன்றிய அரசின் தலையீடுகளையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

இந்நிலையில் அண்மையில் பிரதமர் மோடியை சந்தித்த ஆளுநர் சத்ய பால் மாலிக் அவரிடம் சில கோரிக்கைகளை வைத்ததாகவும், அதற்கு பிரதமர் மோடி முறையாக பதில் அளிக்கவில்லை என மேகாலயா ஆளுநர் சத்ய பால் மாலிக் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக ஹரியானாவில் நடந்த விழாவில் பேசிய, “நான் சமீபத்தில் பிரதமர் மோடியை சந்தித்தேன். அவர் மிகவும் திமிர் பிடித்தவர். அவரிடம் நம்முடைய விவசாயிகள் 500 பேர் பலியாகியுள்ளதாக கூறினேன்.

அதற்கு பதில் அளித்து பேசிய பிரதமர் மோடி, அவர்கள் அனைவரும் எனக்காகவா இறந்தார்கள்? எனக் கேட்கிறார். அதற்கு நான் நீங்கள்தான் நாட்டின் பிரதமர் எனக் கூறினேன். இதனால் வாக்குவாதம் ஆகும் சூழல் ஏற்படவே, பின்னர் அவரை என்னை அமித்ஷாவை சந்திக்குமாறு கூறிவிட்டார். அதனால் நான் அமித்ஷாவை சந்தித்து பேசியபோது,

அவர் ஏதோ பேசிவிட்டார் விடுங்கள். தொடர்ந்து என்னை சந்தியுங்கள்'' என அமித்ஷா கூறியதாக சத்தியபால் மாலிக் தெரிவித்துள்ளார். ஆளுநர் சத்தியபால் மாலிக் அண்மையில் பிரதமர் மோடியை சந்தித்துப்பேசிய சந்திப்பில் தனக்கு ஏற்பட்ட அதிருப்தி தெரிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories