தமிழ்நாடு

“2K கிட் மாணவனை திருமணம் செய்த ட்ரைனிங் டீச்சர் போக்சோவில் கைது” : பகீர் சம்பவத்தின் பின்னணி என்ன?

அரியலூர் மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவரை காதலித்து திருமணம் செய்த பயிற்சி ஆசிரியை மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலிஸார் கைது செய்துள்ளனர்.

“2K கிட் மாணவனை திருமணம் செய்த ட்ரைனிங் டீச்சர் போக்சோவில் கைது” : பகீர் சம்பவத்தின் பின்னணி என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

அரியலூர் மாவட்டம் மழவராயநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். அம்பாபூர் கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் அதே பள்ளியில் பயிற்சி ஆசிரியராக வேலைபார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் பள்ளியில் இருக்கும்போது பயிற்சி ஆசிரியையுடன் அந்த மாணவருடன் நட்பு ஏற்பட்டு பின்பு காதலாக மாறியுள்ளது. இந்த விவகாரம் ஒருகட்டத்தில் மாணவரின் வீட்டிற்கு தெரியவந்து கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இதனால் வீட்டை விட்டு வெளியேறி இருவரும் கடந்த அக்டோபர் மாதம் திருமணம் செய்துள்ளனர். திருமணம் முடிந்தவுடன் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகில் உள்ள கிராமத்தில் மாணவனின் உறவினர் வீட்டில் யாருக்கும் தெரியாமல் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இதனிடையே திருமண விவகாரம் பெற்றோருக்கு தெரியவந்து தேடி வந்த நிலையில், காதலுக்கு எதிர்ப்பு எழுவதால் வயல்களில் பயன்படுத்தப்பட்டும் பூச்சிக்கொல்லி மருந்தை குடிந்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். பின்னர் அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு, குன்னம் சுகாதார மையத்தில் அனுமதித்துள்ளனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல்சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனிடையே மாணவரின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், குன்னம் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் சிறாரை திருமணம் செய்த குற்றத்திற்காக போக்சோ சட்டத்தில் போலிஸார் பயிற்சி ஆசிரியை மீது வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories