தமிழ்நாடு

“தலைவருக்கும், உங்களுக்கும் ஒரு பாலமாக இருக்க வேண்டும் என விரும்புகின்றேன்” : உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

“நான் எந்த பொறுப்புக்கும் ஒருநாளும் ஆசைப்படவில்லை. தலைவருக்கும், உங்களுக்கும் ஒரு பாலமாக இருக்க வேண்டும் என விரும்புகின்றேன்” என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“தலைவருக்கும், உங்களுக்கும் ஒரு பாலமாக இருக்க வேண்டும் என விரும்புகின்றேன்” : உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கோவை காளப்பட்டியில் கழக உறுப்பினர் சேர்ப்பு முகாமை, கழக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் துவக்கி வைத்தார். இதில், கோவை மாநகர் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட 500 இளம் பெண்கள், 500 இளைஞர்கள் என ஆயிரம் பேர் கழகத்தில் இணைந்தனர்.

இதைத்தொடர்ந்து, கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சிறப்புரையாற்றுகையில், “கோவையில் சிறப்பான, எழுச்சியான வரவேற்பை பார்க்க முடிந்தது. சென்ற தேர்தலில் 2 நாட்கள் கோவையில் தங்கி பணிபுரிந்தேன . 10 தொகுதியிலும் வெற்றி பெறுவோம் என்று இருந்தேன். ஆனால் கோவை மக்கள் ஏமாற்றி விட்டீர்கள். தமிழக முதல்வர் பொறுப்பேற்ற போது, கொரோனா தொற்று கோவையில் அதிகம் இருந்தது. ஆட்சிக்கு வந்த 2 மாதங்கள் இதற்காக போராட வேண்டி இருந்தது.

தற்போது ஒமைக்கரான் பரவி வருகின்றது. அதேசமயம், தமிழக மக்களை பாதுகாக்க அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்து வருகிறோம். தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை தமிழக முதல்வர் அவர்கள் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகின்றார்.

நீங்கள் கழகத்தில் சேர்ந்துள்ளீர்கள், தி.மு.க.வின் சாதனைகளை மக்களிடத்தில் நீங்கள் கொண்டு செல்ல வேண்டும். கள வீரர்களாக செயல்பட வேண்டும். இளைஞரணியின் செயலாளராக பொறுப்பேற்ற உடன், 24 லட்சம் புதிய உறுப்பினர்களை தமிழகம் முழுவதும் சுற்று பயணம் செய்து சேர்த்தோம்.

தலைவர் இப்போது 2 கோடி புதிய உறுப்பினரை சேர்க்க வேண்டும் என கூறியுள்ளார். உள்ளாட்சி தேர்தலில் வென்றி பெற ஒவ்வொருவரும் பாடபட வேண்டும்.விரைவில் அமைச்சர் அல்லது துணை முதலைமச்சர் பதவி தரவேண்டும் என கூறினார்கள். நான் எந்த பொறுப்புக்கும் ஒருநாளும் ஆசைப்படவில்லை. தலைவருக்கும், உங்களுக்கும் ஒரு பாலமாக இருக்க வேண்டும் என விரும்புகின்றேன்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories