தமிழ்நாடு

”இந்த தலைமுறைக்கு உங்களை விட்டால் வேறு யாரும் இல்லை” - முதல்வர் குறித்து உருக்கமாகப் பேசிய நெல்லை கண்ணன்!

நெல்லை கண்ணன் கண்ணீர் விட்டுப் பேசிய காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

”இந்த தலைமுறைக்கு உங்களை விட்டால் வேறு யாரும் இல்லை” - முதல்வர் குறித்து உருக்கமாகப் பேசிய நெல்லை கண்ணன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

2021ஆம் ஆண்டுக்கான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விருதுகள் வழங்கும் விழா சென்னை பெரியார் திடலில் நேற்று (டிச.,24) நடைபெற்றது.

இதில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கிய முனைவர் திருமாவளவன் எம்.பி. இந்திய அரசியலமைப்பு சட்ட கோட்பாடுகளை அண்ணல் அம்பேத்கர் கைப்பட எழுதிய படிவத்தைக் கொடுத்து கவுரவித்தார்.

அவரைத் தொடர்ந்து ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவுக்கு பெரியார் ஒளி விருது, தமிழ்க்கடல் என போற்றப்படும் பேச்சாளர் நெல்லை கண்ணனுக்கு காமராசர் கதிர் என்ற விருதும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சி மேடையில் நெல்லை கண்ணன் கண்ணீர் விட்டு பேசிய காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், திருமாவளவன் குறித்து பேசத் தொடங்கியபோதே கண்ணீர் சிந்திய நெல்லை கண்ணன், முதலமைச்சரிடமும் திருமாவிடமும் நான் சொல்லிக்கொள்வது உங்கள் உடல் நலனை பார்த்துக்கொள்ளுங்கள்.

இந்த தலைமுறைக்கு உங்களை விட்டால் வேறு எவரும் இல்லை. நீங்கள் நீண்டகாலம் வாழவேண்டும் என்றார். மேலும், இரண்டாவது விடுதலையை வாங்கிக் கொடுத்தவர் நீங்கள் என முதலமைச்சரை புகழ்ந்து பேசிய நெல்லை கண்ணன், தமிழை மட்டும் அறிந்து வைத்துள்ள என்னை உங்கள் விழி வட்டத்திற்குள் கொண்டு வாருங்கள்.

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என நீங்கள் பதவியேற்றபோது உங்கள் துணைவியார் கண்ணீர் விட்டதை பார்த்து நான் கண்கலங்கினேன் உருக்கமாகப் பேசியிருந்தார்.

banner

Related Stories

Related Stories