தமிழ்நாடு

“புதுவை இரட்டைக்கொலை வழக்கில் பா.ஜ.க இளைஞரணி நிர்வாகி கைது” : ‘பாம் ரவி’ கொலை சம்பவத்தின் பின்னணி என்ன?

புதுச்சேரி பிரபல ரவுடி கொலை வழக்கில் பா.ஜ.க இளைஞரணியை சேர்ந்தவரை போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

“புதுவை இரட்டைக்கொலை வழக்கில் பா.ஜ.க இளைஞரணி நிர்வாகி கைது” : ‘பாம் ரவி’ கொலை சம்பவத்தின் பின்னணி என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

புதுவை மாநகர வாணரப்பேட்டை பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி பாம் ரவி. இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், கடந்த 10ஆம் தேதி வானரப்பேட்டை அலேன் வீதியில் நண்பர்களுடன் பாம் ரவி பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் பாம் ரவி மீது வெடிகுண்டு வீசியது.

அதில் அவர் தப்பித்து ஓடியபோது அந்த குப்பல் விரட்டி வெட்டியது. அப்போது உடனிருந்த நண்பன் அந்தோணி மீது வெடிகுண்டுகள் வீசியது. இதில் அவர்கள் படுகாயமடைந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இருவரும் இறந்தனர். இச்சம்பவத்தால் வானரப்பேட்டை பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. இந்தச் சூழ்நிலையில் ரவுடிகள் பாம் ரவி மற்றும் அந்தோணி கொலையில் தொடர்புடைய பெண் உள்ளிட்ட 6 பேரை புதுச்சேரி முதலியார்பேட்டை, ஒதியன்சாலை தனிப்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

நைனார் மண்டபம் ரமணி, வானரப்பேட்டை பிரகாஷ், சந்துரு, நவீன், ராஜேஷ், அரவிந்தன் ஆகியோர் வானரப்பேட்டை பாழடைந்த ரயில்வே குடியிருப்பில் பதுங்கியிருந்தபோது புதுச்சேரி தனிப்படை போலிஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவர்கள் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் இந்த கொலை வழக்கில் பா.ஜ.க இளைஞர் அணியைச் சேர்ந்தவரை போலிஸார் கைது செய்துள்ளனர். பிரபல ரவுடி பாம் ரவி கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக பா.ஜ.க இளைஞர் அணியை சேர்ந்த விக்னேஷ் என்ற ஷார்ப் விக்கியை சிறப்பு அதிரடி படையினர் கைது செய்து புதுவை முதலியார்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து போலிஸார் அவரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories