தமிழ்நாடு

”அதிமுகவால் முடக்கப்பட்ட அர்ச்சகர் பள்ளி திமுக அரசால் மறுமலர்ச்சி பெற்றுள்ளது” - Hindustan Times புகழாரம்

10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் திருக்கோயில்களில் பணியமர்த்தப்படாமல் மிகவும் சிரமப்பட்டனர்.

”அதிமுகவால் முடக்கப்பட்ட அர்ச்சகர் பள்ளி திமுக அரசால் மறுமலர்ச்சி பெற்றுள்ளது” - Hindustan Times புகழாரம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டில் உள்ள அர்ச்சகர், ஓதுவார் பயிற்சிப் பள்ளிகள் திமுக ஆட்சியில் மறுமலர்ச்சி பெறுகின்றன என்று இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ் பாராட்டு தெரிவித்துள்ளது.

இது குறித்து அவ்விதழ் வெளியிட்டது வருமாறு : -

தமிழ்நாட்டில் உள்ள அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் மறுமலர்ச்சி பெறுகின்றன. 2007 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் இருந்தபோது முதன்முதலில் அமைக்கப்பட்ட ஆறு அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் மாணவர்கள் பயிற்சி பெற்று வந்தனர். திருவண்ணாமலை அருணாசலேசுவரர் திருக்கோயில், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில், பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி திருக்கோயில் ஆகிய ஆறு திருக்கோயில்களில் அர்ச்சகர் பயிற்சி பள்ளிகளும், திருவண்ணாமலை அருணாசலேசுவரர் திருக்கோயில், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்களில் ஓதுவார் பயிற்சிப் பள்ளிகளும், பழனி தண்டாயுதபணி சுவாமி திருக்கோயில், திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி திருக்கோயிலில் தவில் மற்றும் நாதஸ்வர பயிற்சிப் பள்ளியும், ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டா ஆறுமுகசுவாமி திருக்கோயிலில் திவ்ய பிரபந்த பாடலையும் நடைபெற்று வருகிறது.

அனைத்து ஜாதியினரும் திருக்கோயில்களில் அர்ச்சகராக அனுமதிக்க வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் இயற்றிய ஆணையை 2006-2011 அவரது ஆட்சிக் காலத்தில் முழுமையாக அமல்படுத்தினார். கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் திருக்கோயில்களில் பணியமர்த்தப்படாமல் மிகவும் சிரமப்பட்டனர். எந்த பயிற்சிப் பள்ளியும் செயல்படாமல் இருந்தன. அதன் பின்பு அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தின் கீழ் திருக்கோயில் அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் பயின்று தேர்வு செய்யப்பட்ட 22 அர்ச்சகர்களுக்கு 14.08.2021 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பணி நியமன ஆணையை வழங்கினார்கள்.

”அதிமுகவால் முடக்கப்பட்ட அர்ச்சகர் பள்ளி திமுக அரசால் மறுமலர்ச்சி பெற்றுள்ளது” - Hindustan Times புகழாரம்

இதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள 6 அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் 4 ஓதுவார் பயிற்சிப் பள்ளிகள் 3 தவில் மற்றும் நாதஸ்வர பயிற்சிப் பள்ளி, ஒரு திவ்ய பிரபந்த பாடசாலை என ஆக மொத்தம் 16 பயிற்சிப் பள்ளிகள் துவங்கப்பட்டு மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இனி வருங்காலங்களில் திருக்கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் வாழ்வாதாரம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த அரசால் அர்ச்சகர் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த வரலாற்று சிறப்புமிக்க திட்டத்தால் அர்ச்சகர்கள், ஓதுவார்கள், பூசாரிகள், பட்டாச்சாரியார்கள், தவில் மற்றும் நாதஸ்வர கலைஞர்கள் போன்றோர் வாழ்வில் ஒளியேற்றிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை பல்வேறு தரப்பினரும் மனமகிழ்ந்து பாராட்டியும், நன்றி தெரிவித்தும் வருகின்றார்கள்.

தமிழ்நாடு பயிற்சி பெற்ற அர்ச்சகர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் வி.ரங்கநாதன் பேசுகையில், “அனைத்து சமூகத்தைச் சேர்ந்த அர்ச்சகர்களும் சமமாக கோயில்களில் பூஜை செய்யலாம் என்பது சமூக நீதிக்கான வெற்றிக்கான முதல் படியாகும். தீண்டாமையை ஒழிப்பதே முக்கிய குறிக்கோள். மாணவர்கள் பயிற்சி பெற முன்வருவார்கள் என்று நம்புகிறோம், மேலும் அதிக வருமானம் பெறும் முக்கிய கோயில்களில் அவர்களுக்கும் பணி நியமனம் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.” இவ்வாறு அவ்விதழ் பாராட்டியுள்ளது.

banner

Related Stories

Related Stories