தமிழ்நாடு

கரூரில் IT Park.. 200 ஏக்கரில் சிப்காட் பூங்கா : அமைச்சர் செந்தில் பாலாஜி சொன்ன முக்கிய அறிவிப்பு!

கரூர் மாவட்டத்தில் ஐ.டி பார்க் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

கரூரில் IT Park..  200 ஏக்கரில் சிப்காட் பூங்கா : அமைச்சர் செந்தில் பாலாஜி சொன்ன முக்கிய அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கரூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில், தனியார் துறையினருக்கான வேலைவாய்ப்பு முகாம் திருக்காம் புலியூர் பகுதியில் அமைந்துள்ளன தனியார் கல்வியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இதில், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு முகாமி துவக்கிவைத்து மாணவ மாணவிகளுக்கு விண்ணப்பப் படிவங்களை வழங்கினார். மேலும், 50 பேருக்குப் பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, “தமிழ்நாட்டில் முதலமைச்சரின் முயற்சியால் வேலையின்மையை உருவாக்கும் நோக்கில் பல்வேறு நிறுவனங்களில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும்.

கரூர் மாவட்டத்தில் புதிய ஐ.டி பார்க் அமைப்பதற்காக முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாகக் கரூர் மாவட்டத்தில் படித்து வேலை தேடிக்கொண்டிருக்கும் இளைஞர்கள் சொந்த மாவட்டத்திலேயே ஐ.டி துறையில் பணிபுரியும் வாய்ப்பை முதலமைச்சர் கட்டாயம் ஏற்படுத்திக் கொடுப்பார்கள்.

ஜவுளி நகரமான கரூரில் 10 ஆயிரம் கோடிக்கு ஏற்றுமதி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2030ம் ஆண்டிற்குள் அதை 25 ஆயிரம் கோடியாக உயர்த்தும் வகையில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக 200 ஏக்கர் பரப்பளவில் புதிய சிப்காட் பூங்கா அமைப்பதற்கான ஆணையினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கியுள்ளார்.

Made in china, Made in india என் கூறுவதைப்போல் Made in Tamilnadu என்று கூறுவதற்கான முயற்சிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அதேபோல் Made in Karur என்று உலகம் முழுவதும் பேசும் அளவுக்கு நாம் செயல்பட வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories