தமிழ்நாடு

“தென் கொரியா பெண்களை பசுக்களாக சித்தரித்து வீடியோ வெளியீடு” : பால் நிறுவனத்தின் விளம்பரத்தால் சர்ச்சை!

தென் கொரியாவின் முன்னணி பால் நிறுவனமாக ஒன்று பெண்களை தவறாக சித்தரித்து விளம்பரம் வெளியிட்டுள்ளது அங்குள்ள பெண்கள் அமைப்பினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

“தென் கொரியா பெண்களை பசுக்களாக சித்தரித்து வீடியோ வெளியீடு” : பால் நிறுவனத்தின் விளம்பரத்தால் சர்ச்சை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தென் கொரியாவின் முன்னணி பால் நிறுவனமாக Seoul Milk என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் கடந்த 29ம் தேதி பெண்களை தவறாக சித்தரித்து விளம்பரம் ஒன்றை வெளியிட்டிருந்தது. இது அங்குள்ள பெண்கள் அமைப்பினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக Seoul Milk வெளியிட்டுள்ள விளம்பரத்தில், புல்வெளியில் பெண்கள் சிலர் யோகா செய்வது போன்று உள்ளது. அப்போது பெண்களின் தனிப்பட்ட வேலைகளை தெரியாமல் ஒருவர் வீடியோ எடுத்து வருகிறார். மேலும் அந்த நபர் வீடியோ எடுப்பது தெரிந்ததும் அங்கிருந்த பெண்கள், பசுக்காளாக மாறியதாக அதில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

பெண்களை இதில் பசுக்களாகவும், மறைமுகமாகவும் வீடியோ எடுப்பது போன்ற காட்சிகளை சுட்டிக்காட்டி பலரும் தங்களின் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், இதுதொடர்பாக வீடியோ வெளியிட்ட Seoul Milk மன்னிப்புக் கோரியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் அந்நாட்டு மக்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories