தமிழ்நாடு

அரசு பள்ளியை நோக்கி படையெடுக்கும் பெற்றோர்கள்.. 4 லட்சத்தை கடந்த மாணவர் சேர்க்கை - புள்ளிவிவரம் வெளியீடு!

பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் அரசுப் பள்ளியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தைக் கடந்துள்ளது புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்ததுள்ளது.

அரசு பள்ளியை நோக்கி படையெடுக்கும் பெற்றோர்கள்.. 4 லட்சத்தை கடந்த மாணவர் சேர்க்கை - புள்ளிவிவரம் வெளியீடு!
DELL
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பாலும், தங்களது குழந்தைகள் ஆங்கிலம் பேசவேண்டும் என்ற மோகத்தாலும் எவ்வளவு பணம் செலவானாலும், தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்த்து விடவேண்டும் என்பதே பெரும்பாலான பெற்றோர்களின் குறியாக இருந்தது.

இதனால் ஒருபக்கம் கல்விக்கட்டணம் என்ற பெயரில் மிகப் பெரிய அளவிலான கட்டணக்கொள்கைக்கு அ.தி.மு.க அரசு வழிவகை செய்தது. உலகை அச்சுறுத்திய கொரோனாவால் நாட்டு மக்களின் வாழ்வாதம் முடங்கிய நிலையில், கல்விக்கான தங்களது செலவைக் குறைத்துக்கொள்ளும் முடிவினையும் பல பெற்றோர்கள் கையில் எடுத்தனர். கட்டணம் செலுத்தாத மாணவர்களை ஆன்லைன் வகுப்பில் அனுமதிக்காத ஏற்பாட்டினையும் தனியார் பள்ளி நிர்வாகம் மேற்கொண்டது.

இதனால் அதிருப்தி அடைந்த பெற்றோர்களுக்கு அரசுப் பள்ளிகளில் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கும் வகையில், பல புதிய மாற்றங்களை பள்ளிக் கல்வித்துறையில் மேற்கொண்டது தி.மு.க தலைமையிலான தமிழ்நாடு அரசு.

கடந்த மே மாதம் ஆட்சி அதிகாரத்திற்கு வந்த தி.மு.க அரசு, தனியார் பள்ளிகளுக்கு நிகரான கட்டமைப்புகளை உருவாக்க நடவடிக்கை மேற்கொண்டது. அதன் தொடர்ச்சியாக, அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி துவங்கி அதில் மாணவர்களை சேர்க்க பெற்றோர் மத்தியிலும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தியது.

இதனால் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் முன்பைவிட தற்போது அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அரசுப் பள்ளி ஆசிரியர்கள் முன்கூட்டியே பணிகளை துவக்கியுள்ளனர்.

இதன் பயனாக இந்தாண்டு மட்டும் 1 முதல் 8 வரை 4,12,330 மாணவர்கள் அரசுப் பள்ளியில் சேர்ந்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியான புள்ளிவிவரங்களில், 1ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கையில், கடந்த 2019ஆம் ஆண்டு 3,07,056 ஆக இருந்த எண்ணிக்கை, 202ல் 3,84,811 ஆக அதிகரித்துள்ளது.

2ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கையில் கடந்த 2019ஆம் ஆண்டு 3,33,308 ஆக இருந்த எண்ணிக்கை, 2021ல் 3,85,197 ஆக அதிகரித்துள்ளது.

3ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கையில் கடந்த 2019ஆம் ஆண்டு 3,37,158 ஆக இருந்த எண்ணிக்கை, 2021ல் 4,09,212 ஆக அதிகரித்துள்ளது.

4ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கையில் கடந்த 2019ஆம் ஆண்டு 3,53,629 ஆக இருந்த எண்ணிக்கை, 2021ல் 4,36,336 ஆக அதிகரித்துள்ளது.

5ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கையில் கடந்த 2019ஆம் ஆண்டு 3,72,446 ஆக இருந்த எண்ணிக்கை, 2021ல் 4,61,325 ஆக அதிகரித்துள்ளது.

6ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கையில் கடந்த 2019ஆம் ஆண்டு 1,29,329 ஆக இருந்த எண்ணிக்கை, 2021ல் 1,43,785 ஆக அதிகரித்துள்ளது.

7ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கையில் கடந்த 2019ஆம் ஆண்டு 1,21,556 ஆக இருந்த எண்ணிக்கை, 2021ல் 1,35,113 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல், 8ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கையில் கடந்த 2019ஆம் ஆண்டு 1,16,972 ஆக இருந்த எண்ணிக்கை, 2021ல் 1,28,005 ஆக அதிகரித்துள்ளது.

தமிழ்நாடு அரசின் இத்தகைய முயற்சிக்கு கல்வியாளர்கள், பெற்றொர் என பல்வேறு தரப்பினரும் தங்களது பாராட்டினை தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories