தமிழ்நாடு

பிள்ளைகள் கைவிட்டதால் விரக்தி; கடலில் விழச்சென்ற பெண்ணை காப்பாற்றிய ரோந்து போலிஸ் - குவியும் பாராட்டு!

கடலில் தற்கொலைக்கு முயன்ற பெண்ணை போலிஸார் காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிள்ளைகள் கைவிட்டதால் விரக்தி; கடலில் விழச்சென்ற பெண்ணை காப்பாற்றிய ரோந்து போலிஸ் - குவியும் பாராட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை எலியட்ஸ் கடற்கரையில் ராஜா என்ற காவலர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது பெண் ஒருவர் கடலில் இறங்கி சிறிது தூரம் சென்றதைக் பார்த்துள்ளார். உடனே கடலில் இறங்கி அந்த பெண்ணை மீட்டு கரைக்கு அழைத்து வந்தார்.

பின்னர், அவர் குறித்து விசாரணை நடத்தினார். இதில், புரசைவாக்கத்தைச் சேர்ந்த மகேஸ்வரி என்பது தெரியவந்தது. மேலும் கடலில் தற்கொலைக்கு முயன்றதும் தெரிந்தது. பின்னர் அவரை காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது, கணவர் இறந்த நிலையில் தனது பிள்ளைகள் கைவிட்டுவிட்டனர். இதனால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்ததாக போலிஸாரிடம் தெரிவித்தார்.

இதையடுத்து போலிஸார் அவரது மகனைக் காவல்நிலையம் வரவழைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கடலில் தற்கொலைக்கு முயன்ற பெண்ணை காப்பாற்றிய காவலர் ராஜாவுக்கு காவல்துறை அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories