தமிழ்நாடு

தந்தை இறுதிச் சடங்கில் மகளும் உயிரிழப்பு.. ஒரேநாளில் நடந்த சோகம் - என்ன நடந்தது?

சேலத்தில் தந்தை இறந்த சோகத்தில் மகளும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தந்தை இறுதிச் சடங்கில் மகளும் உயிரிழப்பு.. ஒரேநாளில் நடந்த சோகம் - என்ன நடந்தது?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சேலம் மாவட்டம், தும்பல் பகுதியைச் சேர்ந்தவர் சின்னமாது. இவருக்கு லோகாம்பாள் என்ற மகளும், வெங்கடேஷ், மணி என்ற இரண்டு மகன்களும் உள்ளனர். இதையடுத்து மகள் லோகாம்பாள் திருமணம் ஆகியும் தந்தை மீது உள்ளபாசத்தால் அதேபகுதியில் கணவருடன் தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில் சின்னமாது சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து அவர் திடீரென உயிரிழந்தார்.பின்னர் சின்னமாதுவின் இறுதி நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அப்போது இவரின் மகள் லோகாம்பாள் தந்தையின் சடலத்தின் மீது சாய்ந்து கொண்டு கதறி அழுது கொண்டிருந்தார்.

அப்போது, திடீரென பேச்சு மூச்சு இல்லாமல் இருந்தைப் பார்த்தபோது அவரும் உயிரிழந்ததை அறிந்து உறவினர்களுக்கு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து தந்தை மற்றும் மகள் ஆகிய இருவரது சடலங்களையும் ஒன்றாக இடுகாட்டில் உறவினர்கள் அடக்கம் செய்தனர்.

தந்தை இறந்த சோகம் தாங்க முடியாமல் மகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories