தமிழ்நாடு

“வங்கியில் போலி கவரிங் நகைகளை வைத்து 24 லட்சம் மோசடி”: நகை மதிப்பீட்டாளர் உதவியுடன் நடந்த பகீர் முறைகேடு?

ஆற்காடு அருகே தனியார் வங்கியில் போலியான கவரிங் நகைகளை வைத்து 24 லட்சம் மோசடி செய்த வியாபாரி மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த நகை மதிப்பீட்டாளர் ஆகிய இருவரை போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

“வங்கியில் போலி கவரிங் நகைகளை வைத்து 24 லட்சம் மோசடி”: நகை மதிப்பீட்டாளர் உதவியுடன் நடந்த பகீர் முறைகேடு?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே தனியார் வங்கியில் போலியான கவரிங் நகைகளை வைத்து 24 லட்சம் மோசடி செய்த வியாபாரி மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த நகை மதிப்பீட்டாளர் ஆகிய இருவரை ஆற்காடு நகர போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஆற்காடு அமீன் பீரான் தர்கா தெருவை சேர்ந்தவர் அசோக்குமார்(40). இவர் அதே பகுதியில் தனியார் ஏஜென்சி ஒன்றை வைத்து சொந்தமாக வியாபாரம் செய்து வருகிறார். கடந்த சில மாதங்களில் இவர் அடிக்கடி தனியார் வங்கியில் நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்று வந்துள்ளர்.

வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றிவரும் ஆற்காடு தேவி நகர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் நகைகளை அடமானம் வைத்துக் கொண்டு சுமார் 24 லட்சம் ரூபாயை கடனாக வழங்கியுள்ளார்.

இந்த நிலையில் அடிக்கடி கடன் பெற வருவதால் சந்தேகமடைந்த வங்கி மேலாளர், அசோக்குமார் அடமானம் வைக்க கொண்டு வந்த நகைகளை திடீரென ஆய்வு செய்தார். அப்போது போலியான கவரிங் நகைகளை வைத்து மோசடியாக வங்கியில் கடன் பெற்றதும், அதற்கு நகை மதிப்பீட்டாளர் சுரேஷ் உடந்தையாக இருந்ததும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக வங்கி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த ஆற்காடு நகர போலிஸார், மோசடியில் ஈடுபட்ட வியாபாரி அசோக்குமார் மற்றும் உடந்தையாக இருந்த நகை மதிப்பீட்டாளர் சுரேஷ் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

banner

Related Stories

Related Stories