தமிழ்நாடு

திருமணம் செய்வதாகக் கூறி ரூ.2.30 லட்சம் மோசடி: காதலன் மீது போலிஸில் புகார் கொடுத்த ஜூலி!

ரூ.2.30 லட்சம் பண மோசடி செய்வதாக காதலனிடம் பிக்பாஸ் ஜூலி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

திருமணம் செய்வதாகக் கூறி ரூ.2.30 லட்சம் மோசடி: காதலன் மீது போலிஸில் புகார் கொடுத்த ஜூலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஜூலி. இவர் அமைந்தகரை பகுதியைச் சேர்ந்த மனிஷ் என்பவரைக் கடந்த 4 வருடங்களாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.இந்நிலையில், காவல்நிலையத்தில் காதலன் மீது பண மோசடி புகார் கொடுத்துள்ளார் நடிகை ஜூலி.

இந்த புகாரில்,"அமைந்தகரை பகுதியைச் சேர்ந்தவர் மனிஷ். இவரும், நானும் கடந்த 2017ம் ஆண்டிலிருந்து நெருக்கமாகப் பழகிவந்தோம். என்னை, திருமணம் செய்து கொள்வதாகவும் அவர் கூறினார். இதனால் அவருக்கு இருசக்கர வாகனம், தங்க செயின், ஃபிரிட்ஜ் என ரூ.2.30 லட்சம் வரை செலவு செய்துள்ளேன். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி காதலை முறித்துக் கொண்டார்.

மேலும், தொடர்ந்து பணம் கேட்டு என்னை மிரட்டி வருகிறார். இதனால் மனை உளைச்சல் ஏறப்பட்டுள்ளது. எனவே திருமணம் செய்து கொள்வதாக மோசடி செய்த மனிஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார். இந்த புகாரைக் கொண்டு போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories