தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகளுக்கு தி.மு.க அரசு செய்தது என்ன? - கலைஞர் வழியில் செயல்படும் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

ஊனமுற்றவர்கள் என்ற வார்த்தைக்குப் பதில் மாற்றுத்திறனாளிகள் என்று பயன்படுத்த வேண்டும் என திமுக ஆட்சியில்தான் அமல்படுத்தப்பட்டது.

மாற்றுத்திறனாளிகளுக்கு தி.மு.க அரசு செய்தது என்ன? - கலைஞர் வழியில் செயல்படும் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் முதல்வர்களாக இருந்து பேரறிஞர் அண்ணா, கலைஞர் ஆகிய இருவரும் பல்வேறு திட்டங்கள் மூலம் மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கையில் வெளிச்சத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

அவர்களின் வழியில் தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் மாற்றுத்திறனாளிகளுக்காக ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

ஊனமுற்றோர் என முதலில் மாற்றுத்திறனாளிகளை எல்லோரும் அழைத்து வந்தனர். ' ஊனமுற்றவர்கள் உடலளவில் ஊனமுற்றவர்களாக இருக்கலாம். ஆனால் அவர்கள் உள்ளம் ஊனமுற்று இருக்கக்கூடாது என நினைத்த அப்போதைய முதலமைச்சர் கலைஞர் அவர்கள் ஊனமுற்றோர் என்ற வார்த்தைக்குப் பதில் மாற்றுத்திறனாளிகள் என்ற சொல்லைப் பயன்படுத்த உத்தரவிட்டு அவர்களுக்குக் கவுரவத்தைக் கொடுத்தது தி.மு.கழக ஆட்சிதான்.

அதேபோல் ஆசியாவிலேயே மாற்றுத்திறனாளிகளுக்குச் சென்னைக்கு அருகில் தேசிய மையங்கள் தி.மு.க ஆட்சியில்தான் உருவாக்கப்பட்டன.

மாற்றுத்திறனாளிகளுக்கு தி.மு.க அரசு செய்தது என்ன? - கலைஞர் வழியில் செயல்படும் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

முத்தமிழறிஞர் கலைஞர் முதல்வராக இருந்தபோது 2010 - 2011ஆம் நிதிநிலை அறிக்கையில், மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துறை முதலமைச்சரின் நேரடி மேற்பார்வையில் இயங்கும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான ஆணையும் அன்றே பிறப்பிக்கப்பட்டது.

லைஞர் அவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்காகத் தனி கவனம் செலுத்தி பல்வேறு திட்டங்களை நிறைவேற்றினார். கலைஞர் வழியில் தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் தனது நேரடி மேற்பார்வையிலேயே மாற்றுத்திறனாளிகள் துறையைக் கவனித்து வருகிறார்.

மேலும் தமிழ்நாட்டில் முதல்முறையாகச் சட்டமன்றத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு என்று தனி மானியக் கோரிக்கை முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டதும் கலைஞரின் கழக ஆட்சியின் போதுதான்.

வீட்டுவசதி வாரியம், குடிசை மாற்று வாரியம், சமத்துவபுரங்களில் 3% ஒதுக்கீடு, நவீன காதொலி கருவி, கணினி பயிற்சி, இலவச மூன்று சக்கர வாகனங்கள், அரசு வேலை வாய்ப்பில் 3% இட ஒதுக்கீடு, உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தில் அரசு மற்றும் தனியார்த் துறைகளில் பணிபுரிவோருக்குச் சிறப்பு விடுமுறை என தி.மு.க ஆட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்காகச் செயல்படுத்தப்பட்ட நலத்திட்டங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

மாற்றுத்திறனாளிகளுக்கு தி.மு.க அரசு செய்தது என்ன? - கலைஞர் வழியில் செயல்படும் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

அந்தளவிற்கு தி.மு.க ஆட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க ஆட்சியின் போது மாற்றுத் திறனாளிகள் தங்களுக்கான திட்டங்களைப் பெறவே போராடவேண்டிய நிலை இருந்தது.

கடந்த ஆண்டு மாற்றுத்திறனாளிகள் தினத்தன்று வாழ்த்து தெரிவித்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், மக்களின் பேராதரவுடன் மாற்றம் காணவிருக்கும் ஆட்சியில் மாற்றுத்திறனாளிகளின் சட்டபூர்வமான உரிமைகள் அனைத்தும் தடையேதுமின்றி நிறைவேறும் எனத் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்று முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன், அரசுப் பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவருடன் ஒருவர் கட்டணமில்லாமல் பேருந்தில் பயணம் செய்யலாம் என அறிவித்து அதற்கான அரசாணையையும் வெளியிட்டார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் இந்த அறிவிப்பு மாற்றுத்திறனாளிகள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்றது. இதோடு நின்றுவிடாமல் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளின் பராமரிப்புத் தொகையான மாதம் ரூ.1500-ஐ காத்திருப்போர் பட்டியலில் உள்ள 9,173 பயனாளிகளுக்கு வழங்கினார்

மேலும், மாற்றுத்திறனாளிகளின் நலனுக்கென நமது நாட்டில் மட்டுமின்றி, உலகிலேயே முன்மாதிரி திட்டமான “RIGHTS” என்ற திட்டத்தை 1,709 கோடி ரூபாய் செலவில் திட்டமிடப்பட்டுச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இப்படி தி.மு.க அரசு ஆட்சியில் இருக்கும்போது எல்லாம் மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கையை மேம்படுத்துவதாகவே எப்போதும் கழக ஆட்சி இருந்து வருகிறது. இனியும் இருக்கும்.

banner

Related Stories

Related Stories