தமிழ்நாடு

தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்க ஹெலிகாப்டர் பிடித்து வந்த மகன்.. புதுக்கோட்டையில் நெகிழ்ச்சி சம்பவம்!

தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காகப் பல லட்சம் ரூபாய் செலவு செய்து மகன் தனி ஹெலிகாப்டரில் வந்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்க ஹெலிகாப்டர் பிடித்து வந்த மகன்.. புதுக்கோட்டையில் நெகிழ்ச்சி சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

புதுக்கோட்டை மாவட்டம், தென்னங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பையா. இவரது மகன் சசிகுமார். இவர் திருப்பூரில் தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இதனால், தொழில் காரணமாக சசிகுமார் சவுதி அரேபியாவுக்குச் சென்றிருந்தார்.

அப்போது அவரது தந்தை சுப்பையா திடீரென காலமானார். தந்தையின் இறப்பு செய்து குறித்து சுப்பையாவுக்கு உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர், தந்தையின் இறுதி நிகழ்விற்கு எப்படி செல்வது என முடிவு செய்ய முடியாமல் தவித்து வந்துள்ளார். பிறகு சவுதியிலிருந்து விமானம் மூலம் பெங்களூரு வந்துள்ளார்.

பின்னர் அங்கிருந்து ரூ. 5 லட்சம் வாடகைக்குத் தனி ஹெலிகாப்டர் மூலம் புதுக்கோட்டை வந்தடைந்தார். அங்கிருந்து காரில் கிராமத்திற்கு வந்து அவரது தந்தையின் இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

தந்தையின் இறுதி நிகழ்வில் பங்கேற்பதற்காக ரூ. 5 லட்சம் செலவு செய்து தனி ஹெலிகாப்டர் மூலம் மகன் வந்த சம்பவம் அக்கிராமத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories