தமிழ்நாடு

₹1 கோடி கஞ்சா; 10லி சாராயம், நாட்டுத் துப்பாக்கி என கூண்டோடு கைதான கும்பல் ; வேட்டையாடிய நாமக்கல் போலிஸ்

நாமக்கல்லில் சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள 340 கிலோ கஞ்சா பறிமுதல். கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனமும் பறிமுதல். 5 நபர்கள் கைது.

₹1 கோடி கஞ்சா; 10லி சாராயம், நாட்டுத் துப்பாக்கி என கூண்டோடு கைதான கும்பல் ; வேட்டையாடிய நாமக்கல் போலிஸ்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாமக்கல் மாவட்ட போலீசார்க்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் நாமக்கல் துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் தலைமையிலான தனிப்படையினர் நாமக்கல்-திருச்செங்கோடு சாலையில் எர்ணாபுரம் அருகில் இன்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது திருச்செங்கோடு பக்கமிருந்து நாமக்கல் நோக்கி வந்த பொலிரோ பிக்கப் (TN 36 S 8838) வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட 280 கிலோ கஞ்சா இருந்ததை பறிமுதல் செய்தனர். அந்த வாகனத்தில் இருந்தவர்களை விசாரித்ததில் குமரமங்கலத்தைச் சேர்ந்த மணிகண்டன் (41) திருச்செங்கோட்டை சேர்ந்த விஜயவீரன் (30), நல்லூர் கந்தம்பாளையம் பகுதியை சேர்ந்த ராணி (32), ஆகியோர்கள் என்பது தெரியவந்தது.

மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் வரும் வழியில் 2 நபர்களிடம் கஞ்சா விற்பனைக்கு கொடுத்தது தெரியவந்தது. அதன்பேரில் ஈரோட்டை சேர்ந்த ஆனந்தி (39) மற்றும் ராஜீ (61), ஆகியோர்களையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 60 கிோ கஞ்சாவையும் பறிமுதல் செய்துள்ளனர்.

₹1 கோடி கஞ்சா; 10லி சாராயம், நாட்டுத் துப்பாக்கி என கூண்டோடு கைதான கும்பல் ; வேட்டையாடிய நாமக்கல் போலிஸ்

இவர்கள் யாரிடமிருந்து கஞ்சா வாங்குகிறார்கள் என்று இரகசியமாக விசாரணை செய்ததில் உசிலம்பட்டியைச் சேர்ந்த சந்திரமோகன் என்பவர் மூளையாக செயல்பட்டது தெரிய வந்ததுள்ளது.

சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட கஞ்சாவையும், வாகனத்தையும் பறிமுதல் செய்ததுடன், அவர்களை கைது செய்த தனிப்படையினரை நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ் குமார் டாகுர் பாராட்டினார். இதுபோன்ற சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடுவோர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்படுவார்கள் என நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார் டாகுர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் கொல்லிமலையில் உள்ளவர்கள் மலைப்பகுதிகளில் வேட்டையாட உரிமம் பெறாமல் சட்டவிரோதமாக நாட்டுத்துப்பாக்கிகளை வைத்துள்ளதை தடுக்கும் வகையில் பொதுமக்களிடம் தாமாக முன்வந்து துப்பாக்கிகளை காவல் நிலையத்தில் ஒப்படைப்பவர்களின் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் உரிமம் இல்லாத 10 நாட்டு துப்பாக்கிகளை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

கொல்லிமலையில் துணைக் காவல் கணக்காணிப்பாளர் தலைமையில் நடத்திய மதுவிலக்கு வேட்டையில் 10 லிட்டர் கள்ளச்சாராயம் கண்டுபிடிக்கப்பட்டு பள்ளிகாட்டுபட்டியைச் சேர்ந்த கொளப்பாண்டி முத்துசாமி மகன் கொளப்பாண்டி ரவி மற்றும் கம்ப சின்னபையன் மகன் கம்ப ரவி ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

banner

Related Stories

Related Stories