தமிழ்நாடு

புதர்ச்செடிகளை அகற்றும்போது விவசாயிக்கு நேர்ந்த சோகம்... நடந்தது என்ன?

புதர்ச்செடிகளை அகற்றும்போது எதிர்பாராத விதமாக விவசாயி கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் வாழப்பாடியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதர்ச்செடிகளை அகற்றும்போது விவசாயிக்கு நேர்ந்த சோகம்... நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த மேலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி கோவிந்தம்மாள். இந்த தம்பதிக்கு அருள்மணி, அகிலா, ஆர்த்தி என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில், தொடர் கனமழையால் பழனியின் விவசாய கிணற்றில் தண்ணீர் நிரம்பியுள்ளது. இதனால் விவசாயி பழனி கிணற்றைச் சுற்றி இருந்த புதர்ச்செடிகளை அப்புறப்படுத்திக் கொண்டிருந்தார்.

அப்போது, திடீரென கிணற்றின் மண் திட்டு திடீரென சரிந்தது. இதனால் நிலைதடுமாறிய அவர் பழனி கிணற்றுக்குள் விழுந்தார். இதைப் பார்த்த அப்பகுதி உடனே தீயணைப்புத் துறைக்குத் தகவல் கொடுத்தனர்.

பின்னர் அங்கு வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் 20 மணி நேரத்திற்குப் பிறகு பழனியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories