தமிழ்நாடு

”சென்னை மக்களின் நடவடிக்கைகள் ஆறுதல் அளிக்கும் வகையில் உள்ளது” - அமைச்சர் மா.சு. கூறியது என்ன? விவரம் இதோ

தடுப்பூசி செலுத்தும் எண்ணிக்கை குறைவாக உள்ள நாடுகளில் கொரோனாவால் பதிக்கப்பட்டு உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

”சென்னை மக்களின் நடவடிக்கைகள் ஆறுதல் அளிக்கும் வகையில் உள்ளது” - அமைச்சர் மா.சு. கூறியது என்ன? விவரம் இதோ
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

2 தவணை தடுப்பூசி செலுத்தியதால்தான் நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதியானலும் பெரிய அளவில் பாதிக்கவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை ராயபுரம் தங்கசாலை பகுதியில் நடைபெறும் 11-வது மெகா தடுப்பூசி முகாமினை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டு தடுப்பூசி செலுத்திய பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர் ஐடீரிம்ஸ் மூர்த்தி, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், மெகா தடுப்பூசி முகாம் மூலம் சென்னையில் இன்று 2 லட்சம் பேருக்கு தடுப்பூசியை செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 72 லட்சம் பேர் இரண்டாம் டோஸ் தடுப்பூசி செலுத்த கால அவகாசம் முடிந்து காத்திருக்கின்றனர். 2-வது மற்றும் முதல் தவணை தடுப்பூசி செலுத்தாதவர்களை கண்டறிந்து தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்பட்டுத்தப்பட்டுள்ளது என கூறினார்.

60 நாட்களாக கொரோனா தொற்று எண்ணிக்கையை குறைந்து வந்த கொரோனா நேற்று கொரோனா தொற்று உயர்ந்துள்ளது. தடுப்பூசி செலுத்தாமல் இருப்பதே கொரோனா தொற்று உயர்வுக்கு காரணம் எனவே தடுப்பூசி செலுத்த பொதுமக்கள் முன்வர வேண்டும் என வலியுறுத்தினார்.

கடந்த 7 நாட்களில் சிங்கப்பூரில் 14 ஆயிரம் பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 74 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 7 நாட்களில் இங்கிலாந்தில் 75% பேர் தடுப்பூசியை செலுத்தியுள்ளனர். ஆனால் 2.84 லட்சம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 1,029 பேர் உயிரிழந்துள்ளனர். இதேபோல் ரஸ்யாவில் 44% பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.

கடந்த 7 நாட்களில் 2.57 லட்சம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளனர். 8,739 பேர் உயிரிழந்துள்ளனர். உக்ரைன் நாட்டில் 30% பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். அதில் 1.11லட்சம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 4,451 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம், தடுப்பூசி போடாத நாடுகளில் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என ஆய்வு தெரிவிக்கிறது என பேசினார்.

மேலும், சென்னையில் குடிசை பகுதிகள் மற்றும் நடுத்தர மக்கள் வசிக்கும் பகுதிகளில் முக கவசம் செலுத்துவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றது. ஆறுதல் அளிக்கும் விதமாக சென்னையில் உள்ள மால்களில் 51% பேர் முக கவசம் அணிகின்றனர்.

ஒட்டு மொத்த பொதுமக்களை காப்பதற்காக அரசு தடுப்பூசி செலுத்துவதை உறுதிப்படுத்த வலியுறுத்தியது. படத்தின் தயாரிப்பாளர் கூறுவது போல் குறிப்பிட்ட ஒரு படம் வெளியாகிறது என்பதற்காக இல்லை என்றும் 2 தவணை தடுப்பூசி செலுத்தியதால்தான் நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதியானலும் பெரிய அளவில் பாதிக்கவில்லை என கூறினார்.

banner

Related Stories

Related Stories