தமிழ்நாடு

அதிகரித்த தக்காளி விலை; மக்களின் வேதனையை போக்க தமிழ்நாடு அரசு எடுத்த அசத்தல் நடவடிக்கை!

சந்தையில் தக்காளியின் விலை 100ஐ தாண்டி விற்கப்பட்டு வரும் நிலையில் தமிழ்நாடு அரசின் பண்ணை பசுமை நுகர்வோர் கடையில் குறைந்த விலையில் விற்பனையாகிறது.

அதிகரித்த தக்காளி விலை; மக்களின் வேதனையை போக்க தமிழ்நாடு அரசு எடுத்த அசத்தல் நடவடிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பண்ணை பசுமை நுகர்வோர் கடையில் தக்காளி கிலோ 79 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது.

மழை பாதிப்பு காரணமாக தக்காளி வரத்து குறைந்ததால் சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி 130 ரூபாய் முதல் 140 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் நிலையில் மற்ற இடங்களிலுள்ள சில்லரை விற்பனை நிலையங்களில் ஒரு கிலோ தக்காளி 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

இதனால், தக்காளியைக் கொண்டு செய்யப்படும் உணவு விலை அதிகரித்துள்ளதுடன், வீடுகளிலும் சமையலுக்கு தக்காளி பயன்பாடு குறைந்துள்ளது.

இந்த நிலையில் தக்காளி விலையை கட்டுக்குள் கொண்டுவரும் வகையில் இன்று முதல் கூட்டுறவு சங்கம் சார்பில் பண்ணை பசுமை கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ தக்காளி 79 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

வெங்காயம் விலை அதிகரித்த போது பண்ணைப் பசுமை கடைகளில் பொதுமக்களுக்கு ஒரு கிலோ 2 கிலோ என கட்டுப்பாடு நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தக்காளியைப் பொருத்தவரை வரத்து அதிகமாக இருப்பதால் கட்டுப்பாடு எதுவும் விதிக்கப்படவில்லை பொதுமக்கள் தங்களுக்கு எத்தனை கிலோ தக்காளி தேவைப்படுகிறதோ அதனை வாங்கிக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories