தமிழ்நாடு

“அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்” : தற்கொலை செய்து கொண்ட கரூர் மாணவியின் தாயாரிடம் உறுதியளித்த அமைச்சர்!

தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவி வீட்டுக்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் சென்று அவரது தாயாருக்கு ஆறுதல் கூறினர்.

“அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்” : தற்கொலை செய்து கொண்ட கரூர் மாணவியின் தாயாரிடம் உறுதியளித்த அமைச்சர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கரூர் வெண்ணைமலை பகுதியில் உள்ள தனியார்ப் பள்ளியில் படிக்கும் 17 வயது மாணவி கடந்த 19ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்னதாக, மாணவி பாலியல் துன்புறுத்தல் காரணமாகத் தற்கொலை செய்து கொண்டதாகக் கடிதம் எழுதிவைத்துள்ளார்.

இதையடுத்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக மாணவி பயன்படுத்திய செல்போனை கைப்பற்றிய சைபர் க்ரைம் போலிஸார், யாரேனும் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததற்கான ஆதாரம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் ஆகியோர் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் வீட்டிற்குச் சென்று அவரது தாயாரைச் சந்தித்து ஆறுதல் கூறினர். அப்போது, மாணவியின் தற்கொலை குறித்து உரிய விசாரணை நடத்தி, தக்க நடவடிக்கையை அரசு எடுக்கும் என மாணவியின் தாயாரிடம் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories