தமிழ்நாடு

15 சீர்வரிசை தட்டுகளுடன் விமர்சையாக பெண் காவலருக்கு வளைகாப்பு நடத்திய போலிஸார்: நெகிழ்ச்சி சம்பவம்!

பெண் காவலருக்குக் காவல் நிலையத்தில் சக காவலர்கள் வளைகாப்பு நடத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

15 சீர்வரிசை தட்டுகளுடன் விமர்சையாக பெண் காவலருக்கு வளைகாப்பு நடத்திய போலிஸார்: நெகிழ்ச்சி சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் விஷ்ணு பிரியா. இவர் சென்னை யானைகவுனி காவல்நிலையத்தில் காவலராக உள்ளார். காவலர் விஷ்ணு பிரியாவுக்கு கடந்த ஆண்டு ஜெயந்திரேன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் தற்போது ஒன்பது மாத கர்ப்பிணியாக இருக்கும் விஷ்ணு பிரியாவுக்கு வளைகாப்பு நடத்த சக காவலர்கள் முடிவு செய்துள்ளனர். இதையடுத்து நேற்று விஷ்ணு பிரியாவிற்கு காவல்நிலையத்திலேயே வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர்.

மேலும் தேங்காய், பழம் உட்பட 15 சீர்வரிசை தட்டுகள் மற்றும் ஐந்து வகையான உணவுகளுடன் பெற்றோர்கள் நடத்தினால் எப்படி இருக்குமோ அதேபோன்று எந்த குறையும் இல்லாமல் சிறப்பாக வளைகாப்பு நிகழ்ச்சியை போலிஸார் நடத்தியுள்ளனர்.

15 சீர்வரிசை தட்டுகளுடன் விமர்சையாக பெண் காவலருக்கு வளைகாப்பு நடத்திய போலிஸார்: நெகிழ்ச்சி சம்பவம்!

சக காவலர்களின் இந்த அன்பைப் பார்த்து தம்பதிகள் நெகிழ்ந்துபோயினர். இதுபோல் காவல் நிலையத்தில் பெண் காவலருக்கு போலிஸார் அனைவரும் சேர்ந்து வளைகாப்பு நடத்தியதைப் பார்த்த அப்பகுதி மக்கள் நெகிழ்ச்சியடைந்து போலிஸாருக்கு பாராட்டு தெரிவித்தனர்.

banner

Related Stories

Related Stories