தமிழ்நாடு

ட்விட்டரில் ட்ரெண்டாகும் #KovaiWelcomesStalin.. முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளித்த கோவை மக்கள்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கோவை செல்ல உள்ள நிலையில் #KovaiWelcomesStalin ஹேஷ்டேக் டிவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

ட்விட்டரில் ட்ரெண்டாகும் #KovaiWelcomesStalin.. முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளித்த கோவை மக்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கோவை மற்றும் திருப்பூரில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளைத் துவக்கிவைக்க உள்ளார். இதற்காக இன்று கொலை சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை வந்தடைந்தார்.

கோவையில் ரூ.587.91 கோடி மதிப்பில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். பிறகு 23 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

இந்த நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு திருப்பூரில் நடக்கும் அரசு விழாவில் கலந்து கொண்டு புதிய அரசு கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்கிறார். மேலும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.

பின்னர் நாளை கொடியா அரங்கில் நடக்கும் முன்னணி நிறுவனங்களின் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்விலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டுநாள் பயணமாகக் கோவை மற்றும் திருப்பூர் வருவதையொட்டி #KovaiWelcomesStalin என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. இந்த ஹேஷ்டேகை பயன்படுத்தி பலரும் முதலமைச்சரின் சாதனைகளைப் பட்டியலிட்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து கோவை வந்தடைந்தார். பின்னர் கோவை விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்குப் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

banner

Related Stories

Related Stories