தமிழ்நாடு

“எஸ்.ஐ பூமிநாதன் கொலை வழக்கில் 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது” : கொலையாளிகள் சிக்கியது எப்படி?

ஆடு திருடியவர்களை விரட்டி பிடிக்க முயன்றபோது நவல்பட்டு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 சிறுவர்கள் உட்பட 3 பேரை போலிஸார் கைது செய்துள்ளனர்.

“எஸ்.ஐ பூமிநாதன் கொலை வழக்கில் 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது” : கொலையாளிகள்  சிக்கியது எப்படி?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல்துறை சிறப்பு ஆய்வாளர் பூமிநாதன் நேற்று அதிகாலை ஆடு திருடிச்சென்ற நபர்களை மடக்கி பிடித்தார். அப்போது திரும்பி செல்போனில் பேசிக்கொண்டிருந்த எஸ்.ஐ பூமிநாதனை திருட்டுக்கும்பல் வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பி ஓடியுள்ளது. இந்த சம்பவத்திலேயே எஸ்.ஐ பூமிநாதன் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க உடனடியாக தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணையை போலிஸார் மேற்கொண்டனர். கொலை செய்யப்பட இருந்த சில நிமிடங்களுக்கு முன்னர் காவலர் சேகரிடம் செல்போனில் பேசிய எஸ்.ஐ பூமிநாதன் பிடிபட்ட நபர்கள் தேனீர்பட்டி என கூறியதாக தெரிவித்திருக்கிறார்.

இதன் அடிப்படையில் தனிப்படையினர் தேனீர்பட்டி கிராமத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் எஸ்.ஐ பூமிநாதனின் பின்தலையில் கறி வெட்டும் அரிவாள் போன்ற பலமான ஆயுதத்ததால் வெட்டப்பட்டிருந்தால் கறிக்கடை தொடர்புடைய ஆட்கள் கொலை செய்திருக்கலாம் எனவும் போலிஸார் சந்தேகித்தனர்.

இந்த நிலையில் அதிகாலை 2.30 மணி முதல் 3.30 மணி வரை கொலை நடந்த இடத்தில் செயல்பட்ட செல்போன்களின் மூலம் போலிஸார் விசாரணையை துவக்கினர். அப்போது 2 செல்போன்கள் சம்பவ இடத்தில் இருந்து புதுக்கோட்டை பொன்னமராவதி இடையில் இருப்பது கண்டுபிடித்த தனிப்படை போலிஸார் நேற்று மதியம் அப்பகுதிக்கு சென்றனர். ஆனால் கொலையாளிகள் மதியத்திற்கு மேல் செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்து விட்டனர்.

தொடர்ந்து விசாரணையின் இன்று அதிகாலை கொலையாளியை பிடித்தனர். இவர்களில் 2 பேர் சிறுவர்கள். கொலையாளிகள் கல்லணையை அடுத்த தோகூர்கிராமத்தை சேர்ந்தவர்கள் என்றும் ஆடுகளை திருடும் தொழிலை பல வருடகாலமாக செய்து வருவதும் போலிஸாருக்கு தெரியவந்துள்ளது. கொலையாளிகள் தற்போது திருச்சிக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். போலிஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று திருச்சி திருவெறும்பூர் சோழமாபுரம் பகுதியில் உள்ள எஸ்.ஐ பூமிநாதன் வீட்டிற்கு சென்ற நகர்ப்புற நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு குடும்பத்தாரிடம் ஆறுதல் கூறினார்.

banner

Related Stories

Related Stories