தமிழ்நாடு

“சொன்னது போலவே வந்து வாழ்த்திய சிறுவன்”: முதலமைச்சர் முன் பேசி அசத்தல்- பாராட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 7 வயது சிறுவன் ராகுல் ராமை நேரில் அழைத்து வாழ்த்திப் பாராட்டினார்.

“சொன்னது போலவே வந்து வாழ்த்திய சிறுவன்”: முதலமைச்சர் முன் பேசி அசத்தல்- பாராட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 7 வயது சிறுவன் ராகுல் ராமை நேரில் அழைத்து வாழ்த்திப் பாராட்டினார்.

கடந்த பிப்ரவரி மாதம் பொள்ளாச்சியில் நடைபெற்ற ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ நிகழ்வில் சிறுவன் ராகுல் ராம் மேடையேறி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் தேர்தல் வெற்றிக்குப் பிறகு முதல் ஆளாக வந்து உங்களுக்கு வாழ்த்து தெரிவிப்பேன் எனப் பேசினார்.

“சொன்னது போலவே வந்து வாழ்த்திய சிறுவன்”: முதலமைச்சர் முன் பேசி அசத்தல்- பாராட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

சிறுவன் ராகுல் ராம், 1330 திருக்குறள், ஆத்திச்சூடி, நாலடியார், குறிஞ்சிப்பாட்டு, 200 உலக நாடுகளின் பெயர்கள், அவற்றின் தலைநகரங்கள், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள், பாரதியார் கவிதைகள் போன்றவற்றை, மனப்பாடமாக ஒப்புவிக்கும் திறமை பெற்றவர்.

இந்நிலையில், இன்று தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த சிறுவன் ராகுல் ராம், திருக்குறள் நூலை வழங்கி, வெற்றி மேல் வெற்றி பெற வாழ்த்தியதோடு, தான் முன்னர் கூறியதை நினைவுகூர்ந்தார்.

பின்னர் தனது பிறந்தநாளையொட்டி வாழ்த்துப் பெற்றார். பிறந்தநாளன்று தன்னைச் சந்தித்த சிறுவன் ராகுல் ராமுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்தி மகிழ்ந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

இந்நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வின் போது, சிறுவனின் பெற்றோர் கருணா ஹரிராம், கீதா ஆகியோர் உடனிருந்தனர்.

banner

Related Stories

Related Stories