தமிழ்நாடு

அவதூறாகப் பேசிய வழக்கில் பிடிவாரண்டு பிறப்பித்த நீதிபதி: நீதிமன்றத்தில் ஆஜரானார் எச்.ராஜா - அடுத்து என்ன?

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பா.ஜ.க மூத்த தலைவர் எச்.ராஜா ஆஜராகியுள்ளார்.

அவதூறாகப் பேசிய வழக்கில் பிடிவாரண்டு பிறப்பித்த நீதிபதி: நீதிமன்றத்தில் ஆஜரானார் எச்.ராஜா - அடுத்து என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பாரதிய ஜனதா கட்சி தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளர் எச்.ராஜா கடந்த 2018ம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், இந்து சமய அறநிலைத் துறை அதிகாரிகளை அவதூறாகவும் அவர்களது குடும்பத்தினர் பற்றியும் பேசியுள்ளார்.

இது தொடர்பாக துணை ஆணையர் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஹரிகரன் சார்பில் விருதுநகர் பஜார் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் விருதுநகர் பஜார் போலிஸார், 294 பி 353 மற்றும் 505/1பி ஆகிய பிரிவுகளின் கீழ் அதாவது, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும், பொய்யான தகவல்களை பரப்புவதாகவும், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுப்பதும், பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டு இதுதொடர்பான வழக்கு விசாரணை திருவில்லிபுத்தூரில் உள்ள நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் சம்மனை பெற்றுக்கொண்டு வழக்கு விசாரணையில் ஆஜராகாததால் நடுவர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி பரம்வீர், எச்.ராஜாவுக்கு அக்டோபர் 7ஆம் தேதி பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார். கடந்த 27ம் தேதி ஆஜராக உத்தரவிட்டு இருந்தார். இந்நிலையில் கடந்த 27 ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு எதிராக ஆஜராகவில்லை. இதனைத் தொடர்ந்து நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எச்.ராஜா இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார். மேலும் இதுதொடர்பான வழக்கு விசாரணை விரைவில் முடிந்து தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டுகிறது.

banner

Related Stories

Related Stories