தமிழ்நாடு

"எதிர்க்கட்சிகளால் கூட குறை சொல்ல முடியாது": முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைப் பாராட்டிய நடிகர் பார்த்திபன்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி சிறப்பாக உள்ளதாக நடிகர் பார்த்திபன் பாராட்டியுள்ளார்.

"எதிர்க்கட்சிகளால் கூட குறை சொல்ல முடியாது":  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைப் பாராட்டிய நடிகர் பார்த்திபன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாவது அலை உச்சத்திலிருந்தபோது முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற உடனே, துரிதமாக செயல்பட்டு கொரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டு வந்தார்.

மேலும் ரூ.4 ஆயிரம் கொரோனா நிவாரண நிதி, 14 மளிகைப் பொருட்கள், பெட்ரோல் மீதான வரி 3 ரூபாய் குறைப்பு, மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், மக்களைத் தேடி மருத்துவம் என முதல்வராகப் பொறுப்பேற்று 100 நாட்களில் பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றி இந்தியாவிற்கே முன்மாதிரியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திகழ்ந்து வருகிறார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இத்தகைய சிறப்பான செயல்பாடுகளைப் பார்த்து தமிழ்நாடு மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்களும், நடிகர்களும் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

கடந்த ஐந்து நாட்களாகச் சென்னையில் கொட்டிய மழையையும் பொருட்படுத்தாமல் வெள்ள பாதிப்புகளைப் ஆய்வு செய்து மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். மேலும் முதலமைச்சரின் துரித நடவடிக்கையில் இரண்டே நாளில் சென்னை மீண்டும் பழைய நிலைக்கு வந்துள்ளது. கொட்டும் மழையிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்ததை மக்கள் மட்டுமல்லாது பல அரசியல் கட்சி தலைவர்களும் வியந்து பாராட்டி வருகிறார்கள்.

இந்நிலையில், எதிர்க்கட்சிகளால் குறை சொல்ல முடியாத அளவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க ஆட்சி சிறப்பாகச் செயல்பட்டு வருவதாக நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து திருப்பதியில் செய்தியாளர்களிடம் பேசிய பார்த்திபன், "தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி மிகச் சிறப்பாக இருக்கிறது. எதிர்க்கட்சிகளால் குறை சொல்ல முடியாத அளவுக்கு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. தி.மு.க ஆட்சியை மக்கள் பாராட்டி வருகிறார்கள். இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories