தமிழ்நாடு

உஷார் பதிவு: ஐகோர்ட்டில் வேலை எனக் கூறி மோசடி; எச்சரிக்கை விடுக்கும் பதிவாளர்!

தகுதியின் அடிப்படையில் மட்டுமே உயர் நீதிமன்ற பணியிடங்கள் நிரப்பப்படும் என சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் அறிவித்துள்ளார்.

உஷார் பதிவு: ஐகோர்ட்டில் வேலை எனக் கூறி மோசடி; எச்சரிக்கை விடுக்கும் பதிவாளர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உயர்நீதிமன்ற காலிப்பணியிடங்களுக்கு வேலைக்கு சேர்த்து விடுவதாக கூறும் நபர்கள் நம்ப வேண்டாம் என்றும் தகுதியின் அடிப்படையில் மட்டுமே உயர் நீதிமன்ற பணியிடங்கள் நிரப்பப்படும் என சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள தலைமை பதிவாளர், சென்னை உயர் நீதிமன்றம், தமிழ்நாடு, புதுவை கிழமை நீதிமன்றங்களில் சில பணியிடங்களுக்கு நேரடி பணி நியமனங்களாக என அறிவித்துள்ளதாகவும், இதை பயன்படுத்தி வேலைக்காக காத்திருக்கும் நபர்களிடம் சில மோசடி நபர்கள் பணியிடங்களை பெற்று கூறி மோசடி செய்வது தெரிய வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள்ளார்.

மேலும் இத்தகைய மோசடி நபர்களை யாரும் நம்பி ஏமாற வேண்டாம் என்றும் நேரடி பணி நியமனங்கள் தகுதியின் அடிப்படையில் மட்டுமே நிரப்பப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தில் பணி வாங்கி தருவதாக கூறும் நபர்கள் குறித்து  சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி குற்றப்பிரிவு காவல்துறை இயக்குனரிடம் புகார் அளிக்கலாம் எனவும் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories