தமிழ்நாடு

“தொகுதி பக்கம் தலைகாட்ட முடியல” : புதுச்சேரி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பா.ஜ.க எம்.எல்.ஏ!

ஆளும் பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்களே புதுச்சேரி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

“தொகுதி பக்கம் தலைகாட்ட முடியல” : புதுச்சேரி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பா.ஜ.க எம்.எல்.ஏ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

புதுச்சேரியில் பெய்து வரும் தொடர் கனமழையால், மக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். இந்நிலையில் புதுவை மாவட்ட ஆட்சியர் பூர்வா கார்க், இதுவரை எந்த பகுதிகளுக்கும் சென்று மக்களின் குறைகளை கேட்டறியவில்லை. கனமழையால் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ள மக்களையும் அவர் சந்திக்கவில்லை என புகார் எழுந்தது.

இதையடுத்து புதுச்சேரி பா.ஜ.க சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர்கள், புதுவை மாவட்ட ஆட்சியரை அவரது அலுவலகத்தில் சந்தித்து, தங்கள் தொகுதிகளில் உள்ள குறைகளைப் பற்றி எடுத்துரைத்தனர்.

இதில், பொதுமக்கள் உணவின்றி, இடமின்றி பெரிதும் தவித்து வருகிறார்கள். மேலும் கால்வாய்களில் அடைப்பு என்றால், அவற்றை தூர்வாரவும் அடைப்புகளை நீக்கவும் ஆட்கள் இல்லை, போதிய நிதி இல்லை எனவும் துறை அதிகாரிகளும் கூறி வருகின்றனர் என்று சட்டப்பேரவை உறுப்பினர்கள் பல்வேறு குறைகளை ஆட்சியரிடம் எடுத்துரைத்தனர்.

மேலும் மாவட்ட ஆட்சியர் பூர்வா கார்க், இந்த குறைகளை கேட்டு கொண்டு, விரைவில் இது சம்பந்தமாக நல்ல முடிவு எடுக்கப்படும் என சட்டமன்ற உறுப்பினரகளிடம் உத்தரவாதம் அளித்தார். ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களே மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்டு, முறையிட்டது புதுவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories