தமிழ்நாடு

“பொய் சொல்வதற்கே பிறந்தவர் எடப்பாடி.. தி.மு.க அரசு மீதான கடுப்பில் பேசுகிறார்” : முதலமைச்சர் பதிலடி!

“தி.மு.க அரசு இவ்வளவு வேகமாக பணி செய்கிறதே என்ற கடுப்பில், எடப்பாடி பழனிசாமி திடீரென்று வந்து ஷோ காண்பிக்கிறார்” என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“பொய் சொல்வதற்கே பிறந்தவர் எடப்பாடி.. தி.மு.க அரசு மீதான கடுப்பில் பேசுகிறார்” : முதலமைச்சர் பதிலடி!
ASHWIN_KUMAR
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

“தி.மு.க அரசு இவ்வளவு வேகமாக பணி செய்கிறதே என்ற கடுப்பில், எடப்பாடி பழனிசாமி திடீரென்று வந்து ஷோ காண்பிக்கிறார்” என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னையில் கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், “ஸ்மார்ட் சிட்டி என்று விளம்பரப்படுத்திக் கொண்டார்கள், அதில் கொள்ளையடித்திருக்கிறார்கள். பின்பு, மழைநீர் வடிகால் வசதி என்று சொல்லி அந்தத் துறையின் அமைச்சர் சொல்லமுடியாத அளவிற்கு அதைப் பயன்படுத்தி அதிலும் கொள்ளையடித்திருக்கிறார். போன மழையில் பாதிக்கப்பட்ட இடங்களை சீர்படுத்தவேண்டும் என்று ஏற்கனவே கிட்டத்தட்ட 5,000 கோடி ரூபாய் நாங்கள் ஒதுக்கியிருக்கிறோம் என்று சொல்லியிருக்கிறார். ஆனால், இதுவரைக்கும் எதுவும் செய்த மாதிரி தெரியவில்லை.

ஆனால் நாங்கள் வந்து ஐந்தாறு மாதங்களுக்குள் கிட்டத்தட்ட 771 கிலோ மீட்டருக்கு மழைநீர் கால்வாய்களை தூர்வாரியிருக்கிறோம். அங்கிருந்த ஆகாயத் தாமரைகளை எல்லாம் அப்புறப்படுத்தியிருக்கிறோம். போனமுறை வந்த மழையில் தண்ணீர் தேங்கியிருந்த இடங்களைப் பொறுத்தவரை 10 நாட்கள், 15 நாட்கள் இருந்தது. ஆனால் நேற்று தேங்கியிருந்த இடங்களிலெல்லாம் மழை கொஞ்சம் விட்ட நேரத்தில் வடிந்த இடங்களில் அது சரிசெய்யப்பட்டிருக்கிறது.

ஆனால் மெட்ரோ பணி நடக்கும் இடங்களில், அதேபோல தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சிறிது தேங்கியிருக்கிறது. அதையும் எடுப்பதற்கு கிட்டத்தட்ட 560 மோட்டார் பம்ப்செட்கள் வைத்து, எங்கெங்கு தண்ணீர் தேங்கி நிற்கின்றதோ, அங்கெல்லாம் தண்ணீரை உறிஞ்சு எடுத்து அதை வெளியில் விடும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது.

அதுமட்டுமல்ல, அம்மா உணவகத்தில் இந்த மழை முடியும் வரை இலவசமாக உணவு அளிப்பதற்கு நான் உத்தரவிட்டிருக்கிறேன். அதுமட்டுமல்லாமல், மாநகராட்சி சார்பாக காலை, மதியம், இரவு ஆகிய நேரங்களில் அதற்கென்று இருக்கும் சமையல் கூடங்களில் சமைத்து, சாம்பார் சாதம், தயிர்சாதம், சப்பாத்தி போன்றவைகளை தயார் செய்து எங்கெங்கு மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் உணவு வழங்கப்பட்டு வருகிறது.” எனத் தெரிவித்தார்.

“பொய் சொல்வதற்கே பிறந்தவர் எடப்பாடி.. தி.மு.க அரசு மீதான கடுப்பில் பேசுகிறார்” : முதலமைச்சர் பதிலடி!

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

கேள்வி: இன்னும் இரண்டு தினங்களுக்கு, வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் கொடுத்திருக்கிறார்கள், அதற்கு அரசு எந்த மாதிரியான தயார் நிலையில் இருக்கிறது?

முதலமைச்சர் பதில்: வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் கொடுத்திருப்பது உண்மைதான். அதையும் மனதில் வைத்துக்கொண்டுதான், முதலமைச்சர் என்ற முறையில் நானே எல்லா இடங்களுக்கும் சென்றுகொண்டிருக்கிறேன். அதேபோன்று அமைச்சர்களும் சென்று கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், மற்ற மாவட்டங்களிலும் ஆங்காங்கு இருக்கக்கூடிய அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள். அதிகாரிகள் உட்பட அனைவரும் ஒத்துழைத்து அதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று நான் சொல்லியிருக்கிறேன்.

கேள்வி: மழைநீரை எப்போது அப்புறப்படுத்துவதற்கான வாய்ப்பு இருக்கிறது?

முதலமைச்சர் பதில்: முடிந்தவரையில் நாங்கள் செய்து கொண்டு இருக்கிறோம். மழை முடிந்தவுடன் ஓரிரு நாட்களில் நிச்சயமாக எல்லா தண்ணீரும் அப்புறப்படுத்தப்படும்.

கேள்வி: ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமனம் செய்வதில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு வைத்திருக்கிறாரே?

பதில்: அவர் பொய் சொல்வதற்கே பிறந்திருக்கிறார். இப்படித்தான் தேர்தல் நேரத்திலும் பொய் சொல்லிக்கொண்டிருந்தார். இப்போது தேர்தல் முடிந்தபிறகு பெரிய தோல்வியை சந்தித்திருக்கிறார். அந்த வெறுப்பில், தி.மு.க அரசு இவ்வளவு வேகமாக பணி செய்துகொண்டிருக்கிறார்களே என்ற அந்தக் கடுப்பில், அவர் திடீரென்று வந்து ஒரு ஷோ காண்பித்து அவர் இப்படி எல்லாம் சொல்லிக் கொண்டு இருக்கிறார். அதைப்பற்றி எல்லாம் நாங்கள் கவலைப்படவில்லை. எங்கள் சேவை மக்கள் பணி, மக்களுக்கான பணிகள். நேரடியாக போகிறோம், மக்களைச் சந்திக்கிறோம், என்ன குறை என்று கேட்கிறோம். அதற்கு வேண்டியதை செய்து வருகிறோம்.

கேள்வி: ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேடுக்கான விசாரணை ஆணையம் அமைப்பதற்கான வாய்ப்பு இருக்கிறதா? அந்த அதிகாரி, அமைச்சர் உட்பட அனைவரும் மீது விசாரணைக் கமிஷன் பாயுமா?

முதலமைச்சர் பதில் : நிச்சயமாக, உறுதியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories