தமிழ்நாடு

"மழை, வெள்ளம் இருந்தாலும் தடையின்றி பேருந்துகள் இயங்கும்": அமைச்சர் ராஜகண்ணப்பன் பேட்டி!

பேருந்து சேவைகள் தடையின்றி இயங்கும் என போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

"மழை, வெள்ளம் இருந்தாலும் தடையின்றி பேருந்துகள் இயங்கும்": அமைச்சர் ராஜகண்ணப்பன் பேட்டி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து நேற்று முன்தினம் இரவுமுதல் தமிழ்நாடு முழுவதும் பரவலாகக் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாகச் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் விடாமல் மழை கொட்டி வருகிறது.

இந்நிலையில் மழை, வெள்ளம் இருந்தாலும் தடையின்றி சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து விருதுநகர் மாவட்டம், திருவிலிபுத்தூரில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ராஜகண்ணப்பன்," தீப ஒளித் திருநாள் பண்டிகை கொண்டாடுவதற்காக மக்கள் பத்திரமாக அரசு பேருந்துகளில் சொந்த ஊர் சென்றனர்.

அதுபோல் விடுமுறை முடிந்து மீண்டும் அவர்கள் பத்திரமாக வந்து செல்ல சிறப்புப் பேருந்துகள் தயாராக உள்ளது. தற்போது தமிழ்நாடு முழுவதும் மழை பெய்து வந்தாலும் எந்தவிதமான தடையும் இன்றி சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

கடந்த ஆண்டு தீப ஓளித் திருநாளை விட இந்த வருடம் போக்குவரத்துறை அதிக லாபம் ஈட்டியுள்ளது. பெண்கள் இலவச பயணம் மேற்கொண்டாலும் போக்குவரத்துத்துறை சிறப்பாக செயல்பட்டு லாபம் ஈட்டி வருகிறது என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories