தமிழ்நாடு

"507 இடங்களில் மின்மோட்டார்கள் மூலம் வெள்ள நீர் அகற்றம்": சென்னை ஆணையர் அதிரடி நடவடிக்கை!

சென்னையில் 507 இடங்களில் மின்மோட்டர் மூலம் மழைநீர் வெளியேற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

"507 இடங்களில் மின்மோட்டார்கள் மூலம் வெள்ள நீர் அகற்றம்": சென்னை ஆணையர் அதிரடி நடவடிக்கை!
DIGI TEAM 1
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் நேற்று இரவு முதல் இடியுடன் கூடிய பலத்த மழை செய்து வருகிறது.

இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் வெள்ளம் சூழ்ந்துள்ள இடங்களை ஆய்வு செய்து வருகிறார். மேலும் வெள்ளநீரை உடனே அகற்றும் பணிகளைத் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதனைத் தொடர்ந்து சென்னையில் 507 இடங்களில் மின்மோட்டார் மூலம் கன மழையால் ஏற்பட்ட வெள்ள நீரை வெளியேற்று பட்டு வருவதாக மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங்க பேடி தெரிவித்துள்ளார்.

இது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி கூறுகையில், சென்னையில் 507 இடங்களில் மின்மோட்டார்களை கொண்டு வெள்ளநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories