தமிழ்நாடு

“சென்னையில் மேலும் 2 நாட்களுக்கு பலத்த மழை” : வானிலை ஆய்வு மையம் இயக்குநர் முக்கிய அறிவிப்பு!

சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

“சென்னையில் மேலும் 2 நாட்களுக்கு பலத்த மழை” : வானிலை ஆய்வு மையம் இயக்குநர் முக்கிய அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் நேற்று இரவு முதல் இடியுடன் கூடிய பலத்த மழை செய்து வருகிறது.

இந்நிலையில் இன்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்."வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள கடலோர பகுதிகளில் (3.1 கிலோமீட்டர் உயரம் வரை) நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும் சில நேரங்களில் அதி கனமழையும் பெய்யக் கூடும்.

அதேபோல், புதுக்கோட்டை, ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கரூர், திருச்சிராப்பள்ளி, நீலகிரி, கோயம்புத்தூர், கள்ளக்குறிச்சி, சேலம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

மேலும் சென்னை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், புதுக்கோட்டை, ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கரூர், திருச்சிராப்பள்ளி, நீலகிரி, கோயம்புத்தூர், கள்ளக்குறிச்சி, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் நாளை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், டெல்டா மாவட்டங்கள், கடலூர், அரியலூர், பெரம்பலூர், திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் நவம்பர் 9ம் தேதி இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

“சென்னையில் மேலும் 2 நாட்களுக்கு பலத்த மழை” : வானிலை ஆய்வு மையம் இயக்குநர் முக்கிய அறிவிப்பு!
DIGI TEAM 1

அதேபேல் நவம்பர் 10ம் தேதி வட தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும் சில நேரங்களில் அதி கனமழையும், வடக்கு கடலோர மாவட்டங்களை ஒட்டியுள்ள உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், தென் மாவட்டங்களில் இடங்களில் ஓரிரு இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் .

நவம்பர் 11ம் தேதி வட தமிழக கடலோர மாவட்டங்கள் அதனை ஒட்டியுள்ள உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும் சில நேரங்களில் அதி கனமழையும், நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, கிருஷ்ணகிரி உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், டெல்டா மாவட்டங்கள், மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கன மழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும் பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 27 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 27 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

அரபிக்கடல் பகுதிகளில் இன்றும் நாளையும் சூறாவளி காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அதேபோல், நவம்பர் 9ம் தேதி தெற்கு வங்க கடல் மற்றும் மத்திய வங்க கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். நவம்பர் 10 மற்றும் 11 ஆம் தேதி தமிழ்நாடு கடலோர பகுதிகள், குமரி கடல், மன்னார் வளைகுடா, ஆந்திர கடலோர பகுதிகள், தென் மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் 9 ஆம் தேதிக்குள் கரைக்கு திரும்பி வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தற்போதைய காலகட்டத்தில் இயல்பாக பெய்யக்கூடிய மழை அளவை விட 43% அதிக அளவில் மழை பெய்துள்ளது என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories