தமிழ்நாடு

’கஸ்டமருங்க நானு’ ; பாண்டி பஜார் நகைக் கடையில் லாவகமாக நகையை திருடிய பலே கில்லாடி!

நகைக் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து நகை திருடிய பெண்ணை பாண்டிபஜார் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

’கஸ்டமருங்க நானு’ ; பாண்டி பஜார் நகைக் கடையில் லாவகமாக நகையை திருடிய பலே கில்லாடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை பாண்டி பஜார் பகுதியில் இயங்கி வரும் பிரபல நகைக்கடையில் 11 கிராம் நகை திருடு போனதாக கடையின் மேலாளர் பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து நகை கடையின் சிசிடிவி பதிவுகளை வைத்து விசாரணை நடத்தியபோது, கடந்த 23ஆம் தேதி பெண் ஒருவர் குழந்தைகளுக்கு நகை வாங்க வேண்டும் எனக் கூறி நகைகளை பார்த்த பின்பு 100 கிராம் தங்க செயினை திருடிச் சென்றது தெரியவந்தது.

’கஸ்டமருங்க நானு’ ; பாண்டி பஜார் நகைக் கடையில் லாவகமாக நகையை திருடிய பலே கில்லாடி!

இது தொடர்பாக காவல்துறையினர் பெண் தொடர்பாக விசாரணை நடத்திய போது வண்டலூர் ஜிஎன்டி பகுதியை சேர்ந்த பிரியங்கா(31) என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் அந்தப் பெண் இதேபோன்று தாம்பரத்தில் மற்றொரு கடையில் திருட்டில் ஈடுபட்ட தெரியவந்துள்ளது. பெண்ணிடம் இருந்து 35 கிராம் நகைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories