தமிழ்நாடு

“திருமண ஆசை காட்டி பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்” : இளைஞருக்கு 20 ஆண்டு சிறை வழங்கி நீதிமன்றம் அதிரடி !

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

“திருமண ஆசை காட்டி பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்” : இளைஞருக்கு 20 ஆண்டு சிறை வழங்கி நீதிமன்றம் அதிரடி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கோவை மாவட்டம் , நாயக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தகுமார். ஓட்டுநராக இவர் கடந்த 2017ம் ஆண்டு சிறுமி ஒருவரிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை காட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

பிறகு, ஆனந்தகுமார் தம்மை ஏமாற்றுவதை அறிந்த சிறுமி நடந்தவற்றைத் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு கோவை போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி குலசேகரன், சிறுமியை ஆனந்தகுமார் பாலியல் வன்கொடுமை செய்தது ஆதாரங்களுடன் நிறுபனமாகியுள்ளது. ஆகவே அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை வித்து உத்தரவிட்டார்.

banner

Related Stories

Related Stories