தமிழ்நாடு

“நகைக்கடன் தள்ளுபடி.. விரைவில் அரசாணை வெளியிடப்படும்” : அமைச்சர் ஐ.பெரியசாமி கூறிய முக்கிய தகவல்!

நகைக்கடன் தள்ளுபடியால் 11 லட்சம் பேர் பயனடைவார்கள் என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

“நகைக்கடன் தள்ளுபடி.. விரைவில் அரசாணை வெளியிடப்படும்” : அமைச்சர் ஐ.பெரியசாமி கூறிய முக்கிய தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னையில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டார்.

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, “கூட்டுறவுச் சங்கங்களில் 5 சவரனுக்குக் கீழ் கடன் பெற்றவர்கள் கடன் தள்ளுபடி குறித்தான அரசாணை ஒரு வாரத்தில் வெளியிடப்படும். நகைக்கடன் தள்ளுபடியால் சுமார் 11 லட்சம் பேர் பயன்பெறுவார்கள்.

15 கூட்டுறவுச் சங்கங்களில் நடைபெற்றுள்ள ரூ.12 கோடி வரையிலான முறைகேடுகள் குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அடுத்த ஆறுமாதத்திற்குள் விவசாய கூட்டுறவுச் சங்கங்கள் கணினி மயமாக்கப்படும். மேலும் படித்த இளைஞர்களுக்குக் கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்க முன்னுரிமை அளிக்கப்படும்.

அதுமட்டுமல்லாது, சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கக்கூடிய கடன்களின் வட்டியைக் குறைப்பது குறித்து ஆலோசனை செய்து வருகிறோம். விரைவில் இதற்கான அறிவிப்புகள் வெளியாகும். சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் படிப்படியாக நிறைவேற்றத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு” வருகிறது என தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories