தமிழ்நாடு

“ஜாமின் கிடையாது” : தொடர்ந்து அவதூறு பரப்பிவரும் கல்யாணராமன் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்!

பா.ஜ.கவைச் சேர்ந்த கல்யாணராமனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

“ஜாமின் கிடையாது” : தொடர்ந்து அவதூறு பரப்பிவரும் கல்யாணராமன் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தொடர்ச்சியாக அவதூறு கருத்துகளை வெளியிட்டதால் கைது செய்யப்பட்ட பா.ஜ.கவைச் சேர்ந்த கல்யாணராமனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பா.ஜ.க செயற்குழு உறுப்பினரான கல்யாணராமன் தொடர்ந்து மதக் கலவரத்தைத் தூண்டும் வகையில் அவதூறு கருத்துகளைப் பரப்பி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்த நிலையில், குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர், பா.ஜ.க-வை சேர்ந்த கல்யாணராமன் ட்விட்டரில் தொடர்ச்சியாக வெவ்வேறு மதங்களை சேர்ந்த மக்களிடையே வெறுப்புணர்வு, மோதல், கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடு சர்ச்சைகுரிய கருத்துகளை பதிவிட்டு வருவதாக சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் கடந்த 16ஆம் தேதி மத்திய குற்றப்பிரிவு போலிஸார் கல்யாணராமனை கைது செய்தனர். அவர் ஜாமின் கோரி ஜார்ஜ் டவுன் பெருநகர குற்றவியல் மூன்றாவது நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதே நேரத்தில் அவருக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து புகார் தாரர் கோபிநாத் தரப்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி தாவூத் அம்மா முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அருண், கல்யாணராமன் உள்நோக்கத்தோடு மத ரீதியாக பிரிவினையை ஏற்படுத்தும் நோக்கில் இவ்வாறு செயல்படுவதாகவும், மத ரீதியாகவும், மத நம்பிக்கை தொடர்பாகவும் பேசக் கூடாதென ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்டும் அதனை அவர் தொடர்ந்து மீறி வருவதாகவும், அவருக்கு ஜாமீன் வழங்கினால் சமூகத்தில் தவறான முன்னுதாரணமாகிவிடும் எனவும் எடுத்துரைத்தார்.

புகார்தாரர் தரப்பின் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி கல்யாண ராமனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

banner

Related Stories

Related Stories