தமிழ்நாடு

47 பேரை கடித்த வெறிநாய்... அடித்து கொன்ற பொதுமக்கள்: நடந்தது என்ன?

ஒரு மணி நேரத்தில் 47 பேரை வெறிநாய் கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

47 பேரை கடித்த வெறிநாய்... அடித்து கொன்ற பொதுமக்கள்: நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் பேருந்து நிலையம் அருகே தெருநாய் ஒன்று சுற்றித் திருந்து கொண்டிருந்தது. அப்போது அந்த நாய் திடீரென பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த பொதுமக்களை கடித்தது.

இதனால் நாயைப் பொதுமக்கள் அடித்து விரட்டினர். பிறகு பேருந்து நிலையத்திலிருந்து தப்பி ஓடிய நாய் சாலையில் நடந்து சென்ற மக்களைக் கடித்துக் குதறியது. இப்படி ஒரு மணி நேரத்தில் மட்டும் 47 பேரை கடித்ததால் ஆத்திரமடைந்த மக்கள் அந்த நாயை அடித்தே கொன்றனர்.

மேலும், நாய் கடித்தத்தில் 12க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது பற்றி தகவல் அறிந்த ராணிப்பேட்டை கோட்டாட்சியர் பூங்கொடி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இதையடுத்து சாலையில் சுற்றி திரிந்து கொண்டிருக்கும் தெருநாய்களை பிடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கோட்டாசியர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories