தமிழ்நாடு

‘ஒத்த ஓட்டு பாஜக’ ட்ரெண்டுக்கு முன்னோடியே அண்ணாமலைதான்.. அரவக்குறிச்சியில் அசிங்கப்பட்ட கர்நாடக சிங்கம்!?

இன்றைய ‘ஒத்த ஓட்டு பா.ஜ.க’ ட்ரெண்டுக்கு முன்னோடியே அண்ணாமலைதான்.

‘ஒத்த ஓட்டு பாஜக’ ட்ரெண்டுக்கு முன்னோடியே அண்ணாமலைதான்.. அரவக்குறிச்சியில் அசிங்கப்பட்ட கர்நாடக சிங்கம்!?
Admin
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையும் கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஒரு வாக்குச்சாவடியில் வெறும் 1 வாக்கு மட்டுமே பெற்றார். அந்தவகையில் இன்றைய ‘ஒத்த ஓட்டு பா.ஜ.க’ ட்ரெண்டுக்கு முன்னோடியே அண்ணாமலைதான்.

பா.ஜ.கவினர் தாங்கள் செல்வாக்கு கொண்டிருப்பதாக நம்பிக்கொண்டிருக்கும் கொங்கு மண்டலத்திலேயே பெருத்த அடி வாங்கிக் கொண்டிருக்கின்றனர்.

பா.ஜ.க மாநிலத் தலைவராக இருந்த எல்.முருகன் கடந்த சட்டமன்றத் தேர்தலில் தோல்வியுற்று, தற்போது ஒன்றிய இணையமைச்சராகி மத்திய பிரதேசத்திலிருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தற்போது பா.ஜ.க மாநிலத் தலைவராக இருக்கும் அண்ணாமலையும் கடந்த சட்டமன்றத் தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்தார்.

இந்நிலையில் கோவை மாவட்டத்தில் உள்ள குருடம்பாளையம் ஊராட்சி ஒன்பதாவது வார்டு உறுப்பினர் பதவிக்கான இடைத்தேர்தலில் பா.ஜ.கவைச் சேர்ந்த கார்த்திக் போட்டியிட்டார். இவர் பா.ஜ.க இளைஞரணி மாவட்ட துணைத் தலைவராக உள்ளார்.

வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட பா.ஜ.க நிர்வாகி கார்த்திக்கிற்கு ஒரே ஒரு வாக்கு மட்டுமே கிடைத்திருக்கிறது. பா.ஜ.கவைச் சேர்ந்தவர்களே இவருக்கு வாக்களிக்காமல் படுதோல்வியைப் பரிசாக அளித்திருக்கிறார்கள்.

கோவையில் இந்த சூழலை வைத்துக்கொண்டுதான் பா.ஜ.கவினர் ‘கொங்கு நாடு’ கோஷம் போட்டார்களா என பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.

பா.ஜ.கவைச் சேர்ந்த வேட்பாளர் வெறும் 1 ஓட்டு பெற்று படுதோல்வியடைந்த நிலையில், #ஒத்த_ஓட்டு_பாஜக, #Single_Vote_BJP ஆகிய ஹேஷ்டேக்குகள் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகின்றன.

அரவக்குறிச்சி வாக்கு எண்ணிக்கை
அரவக்குறிச்சி வாக்கு எண்ணிக்கை

பா.ஜ.கவினருக்கு படுதோல்வி ஒன்றும் புதிதல்ல. தற்போதைய பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை கடந்த தேர்தலில் ஒரு வாக்குச்சாவடியில் வெறும் 1 வாக்கு மட்டுமே பெற்றார்.

அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியின் 214வது வாக்குச்சாவடியில் மொத்த வாக்குகள் 927. இதில் கடந்த தேர்தலில் பதிவானவை 596. இதில் தி.மு.க வேட்பாளர் இளங்கோ 571 வாக்குகளும், பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலை வெறும் 1 வாக்கும் பெற்றனர்.

அரவக்குறிச்சி தொகுதியின் பல வாக்குச்சாவடிகளில் ஒற்றை இலக்கத்திலேயே வாக்குகளைப் பெற்றிருந்தார் அண்ணாமலை. அந்த வகையில் இன்றைய ‘ஒத்த ஓட்டு பா.ஜ.க’வுக்கு முன்னோடியே இந்த அண்ணாமலைதான் எனப் பலரும் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories